குறியீட்டுக் கணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணிதத்தில் எந்தவொரு கணத்திலும் அதன் அனைத்து உறுப்புகளுக்கும் குறியீடுகள் தரலாம். அவ்விதம் தரப்படும் குறியீடுகளைக் கொண்ட கணம், தரப்பட்ட கணத்தின் குறியீட்டுக் கணம் (Index set) எனப்படும். A என்ற கணத்தின் உறுப்புகளுக்கு இடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட கணம் J எனில் J குறியீட்டுக் கணம் என அழைக்கப்படும். குறியிடல் J லிருந்து A க்கு வரையறுக்கப்படும் ஒரு முழுக்கோப்பாக அமையும். குறியிடப்பட்டவை குறியிடப்பட்ட குடும்பம் (indexed family) ஆகும்.
குறியிடப்பட்ட குடும்பம் பின்வருமாறு எழுதப்படுகிறது:
Remove ads
எடுத்துக்காட்டுகள்
- ஒரு கணம் S இன் உறுப்புகளுக்கு முதலாவது உறுப்பு, இரண்டாவது உறுப்பு, மூன்றாவது உறுப்பு.... என எண்ணிக்கை தரும்போது குறியீட்டுக் கணம் கிடைக்கிறது.
- எனில் குறியீட்டுக் கணம்:
- ஒரு எண்ணுறு முடிவிலா கணத்தின் குறியீட்டுக் கணம்:
இயல் எண்கள் கணம் .
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads