குறு ஒளிர்வண்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குறு ஒளிர்வண்டம் (dwarf galaxy) என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும். எமது பால் வழிப் பேரடையில் இருக்கக்கூடிய 200–400 பில்லியன் விண்மீன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறு ஒளிர்வண்டம் ஒன்றில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும். 30 பில்லியன் விண்மீன்களைக் கொண்ட பெரும் மெகல்லானிய மேகங்கள் சிலவேளைகளில் குறு ஒளிர்வண்டமெனக் கூறப்படுகிறது.

Remove ads
குறு ஒளிர்வண்டத்தின் தோற்றம்
தற்போதைய கொள்கையின் படி, குறு ஒளிர்வண்டங்கள் உட்பட பெரும்பாலான விண்மீன் பேரடைகள் கரும்பொருளின் உதவியுடன் அல்லது உலோகங்களைக் கொண்டிருக்கக்கூடிய வளிமங்களினால் உருவாகின. ஆனாலும், நாசாவின் அண்டத் தேட்டக் கலம் என்ற விண்கலம் உலோகங்களைக் கொண்டிராத வளிமங்களினால் உருவாகிய புதிய குறு ஒளிர்வண்டங்களைக் கண்டறிந்துள்ளது.[1].
உள் குறு ஒளிர்வண்டங்கள்

உட் குழுவில் பெருமளவு குறு ஒளிர்வண்டங்கள் காணப்படுகின்றன: இவை பெரும்பாலும் பால் வழி, அந்திரொமேடா பேரடை, முக்கோண விண்மீன் பேரடை போன்ற பெரும் பேரடைகளைச் சுற்றி வலம் வருகின்றன. 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில்[3] பெரும்பாலான குறு ஒளிர்வண்டங்கள் பால் வழி, அந்திரொமேடா பேரடை போன்றவற்றின் ஆரம்பப் படிமுறை வளர்ச்சியின் போது ஏற்பட்ட பரலை விசைகளினால் (tidal forces) உருவாகின எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய குறு ஒளிர்வண்டங்கள் விண்மீன் பேரடைகளின் மோதுகையினால் உருவாகின்றன[4].
பால் வழியை 20 இற்கும் மேற்பட்ட குறு ஒளிர்வண்டங்கள் சுற்றிவருவதாகத் தெரியவந்துள்ளது. 2008 ஆய்வு முடிவுகளின் படி[5] பால் வழியில் காணப்படும் மிகப்பெரும் உருண்டையான விண்மீன் தொகுதியான ஒமேகா செண்ட்டாரி ஒரு குறு ஒளிர்வண்டம் என வானியலாளர்கள் கருதுகின்றனர். இதன் நடுவே கருங்குழி ஒன்று காணப்படுவதையும் கண்டறிந்துள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads