குளோப் நாடக அரங்கு

From Wikipedia, the free encyclopedia

குளோப் நாடக அரங்கு
Remove ads

குளோப் நாடக அரங்கு (Globe Theatre) வில்லியம் சேக்சுபியருடன் தொடர்புடைய ஒரு அரங்கு ஆகும். இது 1599 ஆம் ஆண்டில் சேக்சுபியரின் நாடக நிறுவனத்தினால் இலண்டனில் கட்டப்பட்டது. இவ்வரங்கு மரத்தினால் உருவாக்கப்பட்டது. இது 1613 சூன் 29 இல் தீயினால் அழிந்தது.[3] 1614 சூன் மாதத்தில் இதே இடத்தில் இரண்டாவது அரங்கு கட்டப்பட்டது. இவ்வரங்கும் 1642 செப்டம்பர் 6 இல் மூடப்பட்டது.[4]

Thumb
இரண்டாவது குளோப் நாடக அரங்கு (1638)[1][2]

அதன் பின்னர் 1997 ல் புதிதாக உருவாக்கப்பட்ட நாடக அரங்கிற்கு ”சேக்சுபியரின் குளோப்” எனப் பெயரிடப்பட்டது. இவ்வரங்கு 230 மீட்டர் நீளம் கொண்டது. இத்திரையரங்கு சவுத்வார்க் பிரிட்ஜ் சாலையில் உள்ளது. பிப்ரவரி 2016 இல் தற்காலிகமாக இரண்டாவது குளோப் அரங்கு மாதிரி “பாப்அப்” என்ற பெயருடன் நியூசிலாந்து, ஆக்லாந்து நகரில் உருவாக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து மூன்று மாதமாக சேக்ஸ்பியரின் நாடகங்கள் திரையிடப்பட்டன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads