குவாரிசும் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

குவாரிசும் பிராந்தியம்
Remove ads

சோராஸ்ம் பிராந்தியம் ( Xorazm Region, உசுபேகிய மொழி : Xorazm viloyati, Хоразм вилояти, خارەزم ۋىلايەتى அல்லது Khorezm Region என்று இன்னும் பொதுவாக அறியப்படுவது ) உஸ்பெகிஸ்தானின் நாட்டின் ஒரு விலோயாட் அல்லது பிராந்தியம் (பகுதி) ஆகும். இது உசுபெக்கிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப் பகுதியியல் ஆமூ தாரியா ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இது துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி, கரகல்பக்ஸ்தான் பிராந்தியம் மற்றும் புகாரா பிராந்தியம் போன்ற பிராந்தியப் பகுதிகளுடன் எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியமானது 6,464 சதுர கிலோமீட்டர்கள் (2,496 sq mi) பரப்பளவும், சுமார் 1,776,700 மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களில் சுமார் 80% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

Thumb
ஹம்கோர் வங்கி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து உர்கெஞ்சின் மத்திய சந்தை பகுதியின் காட்சி. பின்னணியில் உர்கெஞ்சில் உள்ள மிகப்பெரிய வணிக மையமான "கிப்பர்மார்க்ஸ்" ( நீல மற்றும் வெள்ளை கட்டிடம்).
Thumb
கிவா மீது உருசிய தாக்குதல் கிவா . வாசிலி வெரேஷ்சாகின் ஓவியம்.

கோரேஸ்ம் பகுதியானது நிர்வாக வசதிக்காக 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரமாக உர்கென்ச் நகரம் (பாப் 135,000) உள்ளது. பிற முக்கிய நகரங்களாக சோன்கா நகரம், கிவா நகரம், ஷோவோட் நகரம் மற்றும் பிட்னக் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன.

பிராந்தியத்தின் காலநிலை என்பது பொதுவாக வறண்ட ஐரோப்பியத் தட்பவெப்ப கால நிலையாக உள்ளது. பொதுவாக இந்த பிராந்தியத்தில் குளிர்ந்த குளிர் காலமும், மிகவும் வெப்பமான, வறண்ட கோடைக் காலமும் நிலவுகிறது.

கோரேஸ்ம் பிராந்தியத்தில் உள்ள கிவா நகரம் உலக புகழ்பெற்ற கட்டடக்கலை மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் ஆகும். இந்த கிவா நகரானது நாட்டின் சர்வதேச சுற்றுலாவின் முக்கிய மையங்களில் ஒன்றாக உள்ளது.

கோரேஸ்ம் பிராந்தியத்தின் பொருளாதாரம் முதன்மையாக பருத்தியையும் அதைசார்ந்த பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டது. கடந்த பல ஆண்டுகளில் நெல் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் பருத்தி இதுவரை முக்கிய பயிர் ஆகும். ( உஸ்பெக் அரசாங்கம் பாலைவனங்களுக்கு அருகில் நெல் உற்பத்தியை ஊக்கப்படுத்தினாலும், நீர் பயன்பாட்டுக் கவலைகள் உள்ளன ) மேலும் இந்த பிராந்தியத்தில் பலவகையான பழத் தோட்டங்கள் உள்ளன. குறிப்பாக திராட்சைத் தோட்டங்கள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய் தோட்டங்கள் மற்றும் உருளைக் கிழங்கு வயல்களும் உள்ளன. கோரேஸ்ம் பகுதி உஸ்பெகிஸ்தானில் உள்ள "குர்வாக்" முலாம்பழத்திற்கு பிரபலமானது. இங்குள்ள தொழில் துறையானது பருத்தியை மையமாக கொண்டுள்ளது. பருத்தி தொடர்பான தொழில்களான பருத்தி சுத்திகரிப்பு, பருத்தி விதை எண்ணெய் பிரித்தெடுத்தல் மற்றும் துணி ஆகிய தொழில்கள் முக்கியமானவை.

அபு ரெய்ஹான் பிருனி மற்றும் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி போன்ற பல பிரபலமான அறிஞர்கள் பிறந்த இடமாக கோரேஸ்ம் உள்ளது. அல்காரிதம் மற்றும் அல்ஜீப்ரா போன்ற பிரபலமான சொற்கள் இவர்களின் படைப்புகளில் இருந்து பின்பு பெறப்பட்டவை. அல்காரிதம் என்பது குவாரிஸ்மாவின் மாற்றியமைக்கப்பட்ட எழுத்து திருத்தம். மற்றும் அல்ஜீப்ரா என்பது அவரது புகழ்பெற்ற படைப்பான " அல்-ஜப்ர் வா-எல்-முகாபாலா " என்பதிலிருந்து பெறப்பட்டது.

இப்பகுதியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது, 130 கி.மீ. நீளத்துக்கும் மேற்பட்ட   இருப்புப் பாதைகள் மற்றும் 2000 கி.மீ.   நீளமுள்ள சாலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி தொடருந்துகள் மூலமாக ஐரோப்பிய ரஷ்யா மற்றும் காக்கேசியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

நிர்வாக பிரிவுகள்

Thumb
சோராஸ்ம் பிராந்தியத்தின் மாவட்டங்கள்
மேலதிகத் தகவல்கள் வ.எண், மாவட்ட பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads