கு. இராதாமணி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கு. இராதாமணி (K. Rathamani)(இறப்பு 14 ஜூன் 2019) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இளமை & கல்வி

இராதாமணி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிஞ்சிக்குப்பம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இராதாமணி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1]

அரசியல்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1] பின்னர் 2016ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மறைவு

இராதாமணிக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு[2] முதலில் சென்னையில் சிகிச்சை பெற்றார்.[1] பின்னர் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைப் பலனின்றி இராதாமணி 14 சூன் 2019 அன்று காலமானார்.[2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads