கூடகாரம்
மதுரை மாநகரில் இருந்த பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூடகாரம் என்பது மதுரை மாநகரில் இருந்த பகுதி என்பதை அதன் பெயர் கொண்டு உணரமுடிகிறது.
கூடம் என்பது கூடிக் கூம்பாக அமைக்கப்படும் கோபுரத்தையும், மாடி வீடுகளையும் குறிக்கும். கூடகோபுரம் என்று இன்றும் வழங்குகிறோம். இன்றும் மதுரையில் உள்ள தெருக்கள் கிழக்கு மாடவீதி போன்ற பெயர்களுடன் விளங்குகின்றன. இப்பெயர்களில் மாடவீதி என்பது கோபுர வீதியைக் குறிக்கிறது. இதனைக் கூடவீதி என்றும் கொள்ளலாம்.
தமிழ் எழுத்துகளில் நெடில் எழுத்துக்களுக்குக் ‘காரம்’ என்னும் சொல் சேர்க்கப்படும். ஆகாரம், ஈகாரம், ஊகாரம் … என்றெல்லாம் வரும். நிலா என்னும் சொல்லிலுள்ள ‘ஆ’ எழுத்தும் ஆகாரமே.இப்படித் தொடரும் நெடுமையைக் குறிக்கவே காரம் என்னும் அடைமொழியைச் சேர்ப்பது வழக்கம். இது ‘காரம்’ என்னும் தமிழ்ச்சொல் நெடுமைப் பொருளைத் தரும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த வகையில் நெடிய தெருவை உணர்த்தும் சொல்லே காரம் என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.
இவற்றால் கூடகாரம் என்பது மதுரையின் மாடவீதிகளில் ஒன்று எனலாம். மதுரையில் கூடகாரம் என்னும் பகுதி இருந்தது.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்னும் சங்ககால வேந்தன். இவன் கூடகாரம் என்னுமிடத்தில் உயிர் துறந்தான். இவனது வெற்றிகளை ஐயூர் முடவனார்,[1] மதுரை மருதன் இளநாகனார் [2] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads