கெசிக்

மங்கோலிய பேரரசில் மங்கோலிய அரச குடும்பத்திற்கான ஏகாதிபத்திய பாதுகாவலர்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கெசிக் (கிசிக், கெசிச்சன்) (மொங்கோலியம்: விரும்பப்படுபவர் அல்லது ஆசீர்வதிக்கப்பட்டவர்) என்பவர்கள் மங்கோலியப் பேரரசின் ஏகாதிபத்தியக் காவலாளிகள் ஆவர். குறிப்பாக செங்கிஸ் கான் மற்றும் அவரது மனைவி போர்டேவுக்கு. இவர்களின் முக்கிய நோக்கம் பேரரசர்கள் மற்றும் பிற முக்கிய பிரபுக்களுக்காக அடியாட்களாக செயல்படுவதாகும். இவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; பகல் காவலாளி (கெசிக்) மற்றும் இரவு காவலாளி (கவதுல்). இவர்கள் வழக்கமான இராணுவத்திலிருந்து தனித்துவமாக இருந்தனர். போருக்குச் செல்ல மாட்டார்கள், அதற்குப் பதிலாக காவலர் கடமையைத் தொடர்ந்தனர். இவர்களின் உச்ச தளபதி ‘’சரபி’’ என்றழைக்கப்பட்டார்.

மங்கோலிய சாம்ராஜ்ஜியம் யூரேசியாவின் பெரும்பகுதியைக் கடந்து செல்வதால், மங்கோலிய கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகள் மீது இதன் தாக்கங்கள் கெசிக் போன்ற ஏகாதிபத்தியக் காவலாளர்கள் உருவாக வழிவகுத்தன. இந்தியாவில் பெரும் முகலாயப் பேரரசர்களின் அரண்மனை காவலாளர்களுக்காகவும், அக்பரின் படைக்கலங்களிலிருந்து வார இறுதியில் மாற்றப்பட்ட திரி இயக்கிகளுக்காகவும், வாள்களுக்காகவும் பயன்படுத்தப்பட்ட சொல்லே கிசிக் ஆகும். பெர்சியாவில் அரசரின் இரவுநேரக் காவலாளர்கள் கெசிக்கி என்று அழைக்கப்பட்டனர்.[1]

நவீன மங்கோலியாவின் கிசிக்கிடன் இனத்தவர் இவர்களின் வழித்தோன்றல்கள் என நம்பப்படுகிறது. கிசிக்கிடன் தற்போது சீனாவின் உள் மங்கோலியாவில் வசித்து வருகின்றனர்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads