கெட்டினோவ் (Gatineau) அலுவல்முறையில் வில் தெ கடினோ என்று அழைக்கப்படும் இது, கனடாவின் மேற்கு கியூபெக்கில் உள்ளதோர் நகரமாகும். கியூபெக் மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. ஒட்டாவா ஆற்றின் வடகரையில், ஒட்டாவா நகரத்திற்கு எதிர்க்கரையில் இது அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களும் இணைந்து உருவான பெருநகரப் பகுதி தேசிய தலைநகர் வலயம் என வழங்கப்படுகின்றது. 2011 கணக்கெடுப்பின்படி கெட்டினோவின் மக்கள்தொகை 265,349 ஆகவும் பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 314,501 ஆகவும் இருந்தன. ஒட்டாவா–கெட்டினோவ் கணக்கெடுப்பு பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,236,324 ஆகும்.
விரைவான உண்மைகள் கெட்டினோவ், நாடு ...
கெட்டினோவ்
நகரம்
வில் தெ கடினோ
கெட்டினோவில் அலுவலகக் கட்டிடங்களின் மேலாக சூரியன் மறைதல்
சின்னம்
குறிக்கோளுரை: Fortunae meae, multorum faber[1] ("Artisan of my fate and that of several others")