கெய்ரோ பல்கலைக்கழகம்

எகிப்தில் உள்ள கல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

கெய்ரோ பல்கலைக்கழகம்map
Remove ads

கெய்ரோ பல்கலைக்கழகம் எகிப்தில் உள்ள ஒரு முன்னணிப் பல்கலைக் கழகமாகும். இது 1908 முதல் 1940 வரையான காலப்பகுதியில் எகிப்தியப் பல்கலைக் கழகம் எனவும் 1940 முதல் 1952 வரையான காலப்பகுதியில் மன்னர் புவாட் I பல்கலைக் கழகம் எனவும் அழைக்கப்பட்டது. இப் பல்கலைக் கழகத்தின் முதன்மை வளாகம் கீசாவில் உள்ளது. இது கெய்ரோவிலிருந்து, நேரே நைல் நதிக்கு குறுக்காக உள்ளது. இது 1908 டிசம்பர் 21 இல் நிறுவப்பட்டது. ;[1] எவ்வாறாயினும், கெய்ரோவின் பல்வேறு பாகங்களிலும் இது வைக்கப்பட்ட பின்னர் கலைப் பீடத்தின் ஆரம்பம் 1929, ஒக்டோபரில் கீசாவில் அமைக்கப்பட்டது. அல் அஸார் பல்கலைக் கழகத்திற்கு அடுத்ததாக எகிப்தின் அமைக்கப்பட்ட இரண்டாவது பழமையான உயர்கல்வி நிறுவனம் இதுவாகும். இது எகிப்தியப் பல்கலைக் கழகம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் தனிப்பட்ட பிரசைகளின் குழுவினது நிதியில் 1908 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1925 இல் எகிப்திய மன்னர் புவாட் I இன் கீழ் அரச நிறுனவனமாகியது.[2] 1940 இல் மன்னர் புவாட் I இன் மரணத்தின் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரை கனப்படுத்தும் வகையில் மன்னர் புவாட் I பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1952 இல் எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் பெயர் மாற்றப்பட்டது.[1] தற்போது இப் பல்கலைக்கழகம் அதன் 22 பீடங்களில் சுமார் 155,000 மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றது.[3] இப்பல்கலைக் கழக பட்டதாரிகளில் மூவர் நோபல் பரிசு பெற்றவர்களாவர். உலகில் மாணவர் உள்வாங்கல் அளவில் 50வது பெரிய பல்கலைக் கழகம் இதுவாகும்.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், வகை ...
Thumb
கெய்ரோ பல்கலைக்கழகம்
Remove ads

வரலாறு

உயர்கல்விக்காக ஒரு மையம் தேவை என்ற நோக்கில் 1908 டிசம்பர் 21 இல் இந்த பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரி உட்பட கல்லூரிகளை பல்கலைக்கழகமாக நிறுவும் பல முயற்சிகள் எகிப்திய மற்றும் சூடானிய அரச பிரதிநிதிகளால் மூடப்பட்டன. கெய்ரோ பல்கலைக் கழகம் அல் அஷார் பல்கலைக் கழகம் முதலான மார்க்கப் பல்கலைக் கழகங்களுக்கு மாற்றாக ஐரோப்பிய ஈர்ப்புடனான சிவில் பல்கலைக் கழகமாக நிறுவப்பட்டது. இதனால் முதன்மையான உள்ளூர் மாதிரிப் பல்கலைக்கழகமாக திகழ்ந்தது. 1928 இல் முதல் தொகுதி பெண் மாணவர்கள் இணைக்கப்பட்டனர்.[4]

Remove ads

தரவரிசை

கெயிரோப் பல்கலைக் கழகம் எகிப்தின் முதன்மைப் பல்கலைக் கழகமாகப் பொதுவாக தரவரிசைப் படுத்தப்படுகின்றது. அத்துடன் இது ஆப்பிரிக்காவில் உள்ள முதன்மைப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு QS உலக பல்கலைக் கழகத் தரப்படுத்தலில் இது எகிப்தில் இரண்டாவது பல்கலைக் கழகமாகவும், ஆப்பிரிக்காவில் 7வது பல்கலைக் கழகமாகவும்,உலக அளவில் 481-490 தரத்திலும் இது காணப்பட்டது.

உலக பல்கலைக் கழக கல்விப்புல தரப்படுத்தலான ARWU தரப்படுத்தலில் 2017 ஆம் ஆண்டில் எகிப்தில் முதலாம் இடத்திலும் , இது மட்டுமே எகிப்தில் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது, உலக அளவில் 401- 500 தரத்திலும் காணப்பட்டது.

Remove ads

கட்டமைப்பு

கெய்ரோப் பல்கலைக் கழகம், சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஹாசிர் அலைனி (القصر العيني, Qasr-el-'Ayni) என அழைக்கப்படும் மருத்துவக் கல்லூரியே ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ஆகும். இதற்கான முதலாவது கட்டிடத்தை அன்பளிப்புச் செய்தவர் அலைனி பாஷா ஆகும். இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவர் பேராசிரியர். அஹ்மெட் லுற்பி எல்-சாயெட் ஆகும். இவர் பதவி வகுத்தது, 1925 முதல் 1941 வரையாகும்.[5]

நோபல் பரிசு பெற்ற பழைய மாணவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads