கெரயிடுகள்

From Wikipedia, the free encyclopedia

கெரயிடுகள்
Remove ads

கெரயிடுகள் (மொங்கோலியம்: Хэрэйд) என்பவர்கள் கி.பி. 12ம் நூற்றாண்டில் அல்தை சவன் பகுதியிலிருந்த ஐந்து முக்கியமான துருக்கிய[1] அல்லது துருக்கிய-மங்கோலிய பழங்குடியின[2][3] கூட்டமைப்பினரில் (கானேடு) ஒருவர் ஆவர். இவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசுதோரியக் கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஐரோப்பாவின் பிரஸ்தர் ஜான் என்ற புராணக் கதாபாத்திரம் இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் கெரயிடுகள்Хэрэйд (கெரேயிட்), நிலை ...

இவர்கள் ஆண்ட பகுதியானது விரிவானது ஆகும். அது தற்கால மங்கோலியா முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. வசிலி பர்தோல்த் (1913) என்ற வரலாற்றாசிரியர் இவர்கள் ஆனன் மற்றும் கெர்லென் ஆறுகளின் மேல் பகுதியில் தூல் ஆற்றின் அருகிலே இருந்ததாகக் கூறுகிறார்.[4] இவர்கள் 1203ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டனர். மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியிலே செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். 13ம் நூற்றண்டில் துருக்கிய-மங்கோலிய கானேடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

Remove ads

References

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads