கேகோங்க் அபாங்க்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கேகோங்க் அபாங்க்
Remove ads

கேகோங்க் அபாங்க் (Gegong Apang) (பிறப்பு: 8 சூலை 1949) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அபாங்க், அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக 18 சனவரி 1980 முதல் 19 சனவரி 1999 முடியவும், பின்னர் ஆகஸ்டு 2003 முதல் ஏப்ரல் 2007 முடியவும் பணியாற்றியவர்.

விரைவான உண்மைகள் கேகோங்க் அபாங்க், அருணாச்சலப் பிரதேத்தின் 3-வது முதலமைச்சர் ...
Remove ads

அரசியல்

இங்கியாங்-பங்ஜின் சட்டமன்ற தொகுதியிலிருந்து, அருணாசலப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1978, 1980, 1984 ஆண்டுகளில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] பின்னர் மேல் சியாங் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1990, 1995, 2000 மற்றும் 2004 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தேடுக்கப்பட்டார்.[2]

அபாங்க் 1980-இல் முதல் முறையாக அருணாசலப் பிரதேச மாநில முதல்வரக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முடிய முதல்வராக பதவி வகித்த அபாங்க் மீது, ஆளும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால், முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.[3]

பின்னர் 2003-இல் ஐக்கிய ஜனநாயக் கட்சியை துவக்கிய சில மாதங்களில், அபாங்க் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால்,[4] வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக பாரதிய ஜனதா ஆட்சி மலர வழிவகுத்தது.[5] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்றதால், அபாங்க் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[6] அக்டோபர் 2004-இல் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி வெற்றி பெற்றதால், அபாங்க் மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்.[7] 9 ஏப்ரல் 2007-இல் தோர்ஜி காண்டு மாநில முதல்வராக பதவி ஏற்கும் வரை முதல்வர் பணியில் தொடர்ந்தார்.[8]

காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய அபாங்க், 17 பிப்ரவரி 2014-இல் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.[9]

Remove ads

ஊழல் குற்றச்சாட்டுகள்

ஆகஸ்டு 2010-இல் 1,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் அபாங்க் கைதானார்.[10] அரசியல் பழி வாங்குதல் பொருட்டு, இத்தகைய குற்றச்சாட்டுகள் தன் மீது காங்கிரசு கட்சி தொடர்ந்துள்ளதாக அபாங்க் வலியுறுத்தியுள்ளார்.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads