கேசவனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேசவனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். செவ்வேளை(=முருகனை)ப் போற்றிப் பாடிய 14 எண்ணிடப்பட்ட பரிபாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. இவர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்து இவரது பரிபாடலுக்கு இவரே இசையமைத்து நோதிறப் பண்ணில் பாடினார்.

பாடலில் சொல்லப்பட்ட செய்திகள்
முருகனை வேண்டுதல்
- முருகா! உனக்குப் புகழ் அதிகம். அதனைக் காட்டிலும் அதிகமாக நாங்கள் உன்னை நெருங்கி வழிபட வரம் தா.
திருப்பரங்குன்றம் - உவமைகள்
திருப்பரங்குன்றத்திலுள்ள நிலைத்திணைப் பொருள்களும், அலைதிணைப் பொருள்களும் எவ்வாறு விளங்கின என்பது உவமையாக்கிக் காட்டப்பட்டுள்ளன.
வண்டின் குரல் பண் போல் இருந்தது.
மூங்கில் முருகனை வழிபடும் மகளிர் தோள் போல் இருந்தது.
மயிலின் குரல் மணந்து பிரிந்தாரை 'வாரும், வாரும்' என்று அழைப்பது போல இருந்தன.
கொன்றைமலர்க் கொத்துகள் பொன்மாலைகள் போல் இருந்தன.
பாறைகளில் உதிர்ந்து கிடந்த வேங்கை மலர்கள் 'புலி புலி' என்று பேதை மகளிர் தாய்மாரிடம் சொல்லும்படி கிடந்தன.
செயுதிகளும் புதுமை நோக்கும்
அகில், தூபப் புகை வெண்மேகம் போல் எழுந்தது.
ஆறு தலையும், பன்னிரு கையும் வள்ளியை மணக்கப் பயன்படுத்திக்கொண்டாய்.
பிரிந்து வந்த தலைவர் நீங்காமல் இருக்க மகளிர் யாழ் மீட்டுவர்.
முருகன் பிறந்தபோதே இந்திரன் முதலானோர் அஞ்சினர்.
இரு பிறப்பும், இரு பெயரும் உடைய அந்தணர் செய்யும் அறத்தை விரும்புபவன் முருகன்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads