கேசவ் மகராச்

From Wikipedia, the free encyclopedia

கேசவ் மகராச்
Remove ads

கேசவ் மகராச் (Keshav Maharaj, பிறப்பு: 7 பெப்ரவரி 1990) ஒரு தென்னாப்பிரிக்கத் தொழில்-முறைத் துடுப்பாட்ட வீரர். இவர் தென்னாப்பிரிக்கத் தேசிய அணியில் தேர்வு, பன்னாட்டு ஒருநாள், பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தற்போது வரையிடப்பட்ட நிறைவுப் போட்டிகளில் துணைத்தலைவராக விளையாடுகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளரும், கீழ்-மட்ட மட்டையாட்ட வீரரும் ஆவார். இவத் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை உள்ளூர் குவாசூளு-நட்டால் அணிய்க்காக 2006 இல் விளையாடினார். 2016 நவம்பரில் தென்னாப்பிரிகாவுக்காக தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[1][2]

2021 செப்டம்பரில், முதல் தடவையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.[3] அதே காலப்பகுதியில் இலங்கைக்கு எதிரான இ20ப போட்டியிலும் தலைமைப் பொறுப்பில் விளையாடினார்.[4]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கேசவ் மகராச் டர்பன் நகரில் ஆத்மானந்த் மகராச், காஞ்சனமாலா ஆகியோருக்கு 1990 பெப்ரவரி 7 இல் பிறந்தார். கேசவின் பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] பிறந்து 1874 இல் தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.[5] தந்தை ஆத்மானந்த் குவசூலு-நத்தால் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக விளையாடினார்.[5] கேசவ் மகராச் ஒரு கதக் நாட்டியக் கலைஞரான லெரிசா முனுசாமி என்பவரை 2022 ஏப்ரலில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[6][7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads