கேடயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேடயம் என்பது, ஒருவகைத் தனியாள் பாதுகாப்புக் கவசம். இது, போர்களின்போது அம்புகள் போன்ற எறியப்படும் ஆயுதங்களைத் தடுப்பதற்கும், வாள், கதாயுதம், தாக்குதல் கோடரி போன்ற ஆயுதங்களால் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் திசைதிருப்பி விடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கேடயங்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. சில முழு உடம்பையும் மறைக்கக்கூடிய அளவு பெரியவையாகவும், வேறு சில, போர்களில் இருவர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும்போது பயன்படுத்தக்கூடிய அளவு சிறியவையாகவும் இருக்கின்றன. கேடயங்களின் தடிப்புக்களும் தேவைக்கு ஏற்றபடி வேறுபடுகின்றன. எறியப்படும் ஈட்டிகளைத் தடுப்பதற்கான கேடயங்கள் தடிப்பான மரப் பலகைகளினால் செய்யப்படுவது உண்டு. வாட்போர்களின் போது பயன்படும் கேடயங்கள் தடிப்புக் குறைந்தவையாகவும், கையாள்வதற்கு இலகுவானவையாகவும் இருக்கும்.[1][2][3]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads