கேரளப் பல்கலைக்கழகம்

கேரள அரசு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

கேரளப் பல்கலைக்கழகம்
Remove ads

கேரளப் பல்கலைக்கழகம் (University of Kerala) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

இப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் (faculty), 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிகள் மாநிலமெங்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகும். இவற்றில் இரண்டு சட்டக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், இரண்டு மருத்துவக் கல்லூரிகள், 13 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆகியனவும் அடங்குகின்றன.

Remove ads

தமிழ்த்துறை

கேரளா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பாரம்பரியம் மிக்க துறையாகும். 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டைச்சேர்ந்த டாக்டர். அழகப்பச் செட்டியார் என்பவர் தந்த நன்கொடை ரூ.ஒரு இலட்சம் உதவியால் இத்துறை நிறுவப்பட்டது. பின்னர் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம், பேரா. இராகவ அய்யங்கார், பேரா. வையாபுரிப் பிள்ளை, பேரா. ச. வே. சுப்பிரமணியன், பேரா. இளையபெருமாள், பேரா. சுப்பிரமணி, பேராசிரியை. குளோரியா சுந்தரமதி, பேரா. கி. நாச்சிமுத்து ஆகியோரால் உருவாக்கி வளர்க்கப்பட்டது.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads