கேரள மத்திய பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

கேரள மத்திய பல்கலைக்கழகம்
Remove ads

கேரள மத்திய பல்கலைக்கழகம் (Central University of Kerala) என்பது இந்தியப் பாராளுமன்றத்தால் மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 (2009 ஆம் ஆண்டின் சட்டம் 25) இன் கீழ் நிறுவப்பட்ட 15 மத்திய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் வடமாவட்டமான காசர்கோடில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் காசர்கோட்டிலிருந்து 9.8 கிலோ மீட்டர் தொலைவிலும் காஞ்ஞங்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேரியவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Thumb
மத்திய பல்கலைக்கழகம் பேரியா

பல்கலைக்கழகம் வித்யாநகரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் மானுடவியல் பள்ளி மற்றும் பிற வசதிகளுடன் செயல்படத் தொடங்கியது.[1][2]

Thumb
கேரள மத்திய பல்கலைக்கழகம், காசர்கோடு
Remove ads

அமைப்பு மற்றும் நிர்வாகம்

பள்ளிகள் மற்றும் துறைகள்

தேஜஸ்வினி மலை (பிரதான வளாகம்)

உலகளாவிய ஆய்வுகள் பள்ளி

  • சர்வதேச உறவுகள் துறை

பொருளியல் மற்றும் கல்வி பள்ளி

  • கல்வித்துறை

மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி

  • சமூக பணித் துறை

இயற்பியல் அறிவியல் பள்ளி

  • வேதியியல் துறை
  • கணினி அறிவியல் துறை
  • கணிதத் துறை
  • இயற்பியல் துறை

அறிவியல் வளாகம்

உயிரியல் அறிவியல் பள்ளி

  • விலங்கு அறிவியல் துறை
  • உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை
  • மரபணு அறிவியல் துறை
  • தாவர அறிவியல் துறை

நில அறிவியல் பள்ளி

  • சுற்றுச்சூழல் அறிவியல் துறை
  • புவியியல் துறை

சட்ட வளாகம்

தொழில்முறை ஆய்வுகள் பள்ளி

  • சட்டத் துறை

மொழி மற்றும் ஒப்பீட்டு இலக்கிய பள்ளி

  • ஒப்பீட்டு இலக்கியத் துறை
  • இந்தி துறை
  • மொழியியல் துறை

தொழில்முறை ஆய்வுகள் பள்ளி

  • கல்வித்துறை

வணிக ஆய்வுகள் பள்ளி

  • மேலாண்மை ஆய்வுகள் துறை
  • சுற்றுலா ஆய்வுகள் துறை
  • வணிக மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை
Remove ads

கல்வியாளர்கள்

கல்வித் திட்டங்கள்

முதுகலை திட்டங்கள்

முதுகலை திட்டத்தின் காலம் 4 பருவங்கள். ஒவ்வொரு பருவ காலமும் 16–18 வாரங்கள், 5 வேலை நாட்கள் மற்றும் வாரத்திற்கு 30 பாட மணி நேரங்கள் எனப் பிரிக்கப்பட்டுச் செயல்படுகிறது.

விருப்ப அடிப்படையிலான பாடத்தேர்வு மற்றும் பருவமுறை (சிபிசிஎஸ்) வடிவத்தின் கீழ் கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இரண்டு வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன:

  • ஒவ்வொரு துறையினரால் அடையாளம் காணப்பட்ட அடிப்படை படிப்புகள், படிப்பு விடயத்தில் ஒரு பரந்த தளத்தை வழங்குகின்றன;
  • தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள், ஆசிரிய ஆலோசகருடன் கலந்தாலோசித்து மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இவற்றைத் தவிர, ஒவ்வொரு மாணவரும் உண்மையான சிக்கல்களுக்கு அறிவைப் பயன்படுத்துவதை வலியுறுத்தும் ஒரு விளக்கக்காட்சி /ஆய்வுத் திட்டத்தைச் செய்கிறார்கள். முதுநிலை திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான குறைந்தபட்ச மொத்த வரவு 4 பருவத்திற்கு 72 வரவு. 72 வரவுகளில், ஒரு மாணவர் குறைந்தபட்சம் 48 ஐ பெற வேண்டும். இதில் அடிப்படை படிப்புகளுக்கான ஆய்வுத்திட்டம் மற்றும் குறைந்தபட்சம் 12. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு 24 வரவுகளுக்கு மேல் இல்லை.[2]

முனைவர் பட்டப் படிப்பு

பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் முனைவர் பட்டப்படிப்பினை வழங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களாகும். கிலா என்பது சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் அறிவியலின் ஆராய்ச்சி மையமாகும்.

தரவரிசை

Remove ads

மாணவர் வாழ்க்கை

உதவித்தொகை / நிதி உதவி

இப்பல்கலைக்கழகம் இதன் முதுநிலை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. மாணவர் எதிர்ப்பு காரணமாக இது 2017 கல்வியாண்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டது.

விடுதி வசதி

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனியான விடுதிகள் உள்ளன. [2]

போக்குவரத்து வசதி

அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் விடுதிகளிலிருந்து பல்கலைக்கழக வளாகங்களுக்குச் செல்ல மானிய விலையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.[2]

பல்கலைக்கழக நூலகம்

மத்திய பல்கலைக்கழகம் அதன் அனைத்து வளாகங்களிலும் நூலகங்களைக் கொண்டுள்ளது.[2]

மாணவர் பேரவை

மாணவர் பேரவை என்பது 40 மாணவர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு மாணவர் அமைப்பாகும். இதில் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 20 உறுப்பினர்களைத் துறைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயற்குழுவையும் கொண்டுள்ளது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இரண்டு இணைச் செயலாளர்கள் மற்றும் நான்கு செயற்குழு உறுப்பினர்கள் மாணவர் பேரவையின் அலுவல் குழுவில் உள்ளனர். [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads