கே. என். சொக்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. என். சொக்சி (K. N. Choksy) என அழைக்கப்படும் கைர்சாஸ்ப் நாரிமன் சொக்சி (Kairshasp Nariman Choksy, 7 பெப்ரவரி 1933 - 5 பெப்ரவரி 2015)[1] இலங்கை சனாதிபதி வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.[2] 1993 முதல் 1994 வரை அரசுத்தலைவர் டிங்கிரி பண்டா விஜயதுங்காவின் அரசில் அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
சொக்சி இலங்கையின் மிகச் சிறுபான்மை இனங்களில் ஒன்றான பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை வழிப் பாட்டனார் 1880களில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள சூரத்து நகரில் இருந்து இலங்கையில் குடியேறியவராவார். கொழும்பில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சொக்சியின் தந்தை நாரிமன் கே. சொக்சி ஒரு வழக்கறிஞராவார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்ற சொக்சி சட்டக் கல்வி பயின்று 1958 இல் வழக்கறிஞரானார். 1981 இல் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
Remove ads
அரசியலில்
1989 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2001 முதல் 2004 நிதி அமைச்சராகவும், 1993 முதல் 1994 வரை அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.
குடும்பம்
சொக்சி மும்பையச் சேர்ந்த ஃபிரெனி கூப்பர் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் ஜம்சீது மத்திய யூரேசியப் படிப்புகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சரத்துத்திர சமய அறிஞருமான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இரண்டாவது மகன் வாசிங்டனில் உள்ள அமெரிக்க வணிகக் கழகத்தின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். மூன்றாவது மகன், விசுதாஸ்ப் கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads