கே. சி. கருப்பண்ணன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. சி. கருப்பண்ணன் (K.C.Karuppannan, பிறப்பு:ஆகத்து 20, 1957) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். இவரது தொழில் விவசாயம் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துதல் ஆகும்.[1] இவர் 1972இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல்வாழ்வைத் துவக்கினார். 2001 முதல் 2006வரை பவானி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் பின் 2006 ஆண்டு தேர்தலில் பவானி தொகுதியில் தோல்வியுற்றார். 2011 ஆண்டு பவானி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு பவானி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads