கே. வி. கந்தசாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கா. வே. கந்தசாமி (K. V. Kandaswamy) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 1926 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். கே. வி. கே. என்ற சுருக்கப்பெயரால் நன்கு அறியப்படுகிறார்
Remove ads
சட்டமன்ற உறுப்பினராக
கந்தசாமி, 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் முக்கிய அமைச்சரான ம. கண்ணப்பனைத் தோற்கடித்தார்.[4][5]
கந்தசாமி தம் மக்களிடையே பெரும் புகழுடன் சாதி வேறுபாடு இன்றி வாழ்ந்து வந்தவர் ஆவார். தமிழகத்தில் மூடப்படாத இரண்டு வீடுகள் மட்டுமே இருப்பதாகவும், அதில் ஒன்று எம்.ஜி.ராமச்சந்திரனின் வீடு என்றும், மற்றொன்று 2008-ம் ஆண்டு இறக்கும் வரை தனியாக வசித்து வந்த கந்தசாமியின் சொந்த வீடு என்றும் கூறப்பட்டது.[6]
மாநிலத்தில் தென்னை மரங்களுக்கு வரி விதிக்கும் முன்மொழிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பேசினார். தென்னை மரங்களுக்கு வரி விதித்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். சொந்தக் கட்சிக்கு எதிராகப் பேசியதற்காக இவர் உடனடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், பின்னர் எம்.ஜி.ஆர் இவரிடம் தனிப்பட்ட முறையில் இத்திட்டத்தை திரும்பபெறுவதாக உறுதியளித்தார். அ.தி.மு.க.வின் கோயம்புத்தூர் பிரிவின் ஆரம்பத்திலிருந்தே தலைவராக இருந்தார். பிரபலமான நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட மக்கள் ஈர்ப்பின் மூலம் கோவையை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.
ம. கோ. இராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி இரு அணிகளாக உடைந்து போட்டியிட்ட 1989 தேர்தலில் இவர் வி. என். ஜானகியை ஆதரித்தார். தேர்தலில் தோல்வியடைந்த இக்கட்சி, பின்னர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அணியுடன் இணைந்தது. அ.தி.மு.க.வின் கோயம்புத்தூர் பிரிவின் தலைவராக இவர் தொடர்ந்தார். ஆனால் இவரது அதிகரித்து வந்த புகழ் கட்சித் தலைமையை அச்சுறுத்தியது, இவரை கட்சித் தலைமை ஓரங்கட்டியது. இதனால் 1996ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தனது தாய்க் கட்சியான தி.மு.க.வில் இணைந்து 2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2008 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று காலமானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads