கே. வி. விஜயதாஸ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கே. வி. விஜயதாஸ்
Remove ads

கே. வி. விஜயதாஸ் (K. V. Vijayadas) (25 மே 1959 - 18 சனவரி 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவரது தந்தையின் பெயர் கே. வேலாயுதன் ஆகும். 1975 ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தில் (கேரளா) இணைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். இவர் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு கோங்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் விஜயதாஸ் 60790 வாக்குகள் பெற்று பந்தளம் சுதாகரனை 13271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1] [2] மிச்சபூமி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அவர் 13 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. CPIM பாலக்காடு மாவட்டக் குழு உறுப்பினராகவும், பாலக்காடு மாவட்ட ஊராட்சியின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாவட்ட பஞ்சாயத்து மூலம் மின்சாரம் தயாரிக்க கல்லடிகோட்மீன்வல்லம் திட்டம் கொண்டு வரப்பட்டது. சிக்கலான புவியியல் அமைப்பைக் கொண்ட கோங்காடின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உடல்நலக் கோளாறுகள் காரணமாக அவர் 18 ஜனவரி 2021 அன்று திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் காலமானார்.

விரைவான உண்மைகள் கே வி விஜயதாஸ், சட்டப் பேரவை உறுப்பினர், கேரளம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads