கொச்சின் இல்லம்

From Wikipedia, the free encyclopedia

கொச்சின் இல்லம்
Remove ads

கொச்சின் இல்லம் (Cochin House) என்பது கொச்சின் மகாராசாவுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள முன்னாள் குடியிருப்பு ஆகும். யந்தர் மந்தர் சாலை 3 என்ற முகவரியில் இவ்வீடு அமைந்துள்ளது. கொச்சின் மாநிலத்தின் அரண்மனை என்றும் இவ்வில்லம் அழைக்கப்படுகிறது.

Thumb
கொச்சின் இல்லம்

வரலாறு

இவ்வீடு முதலில் ஒரு பஞ்சாபியான சுசன் சிங் என்ற வீடுநில விற்பனையாளரால் அவரது தனிப்பட்ட குடியிருப்பாகக் கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் புதுதில்லியை தலைநகரமாக பிரித்தானிய அரசு அறிவித்தபோது சுசன் சிங் மற்றும் அவருடைய மகன் சோபா சிங் [1] இருவரும் புதுதில்லியின் கட்டுமானத் திட்டத்தில் மூத்த துணை ஒப்பந்ததாரர்களாக பொறுப்பேற்றனர். புதுதில்லி நகர கட்டமைப்புத் திட்டத்திற்காக இக்கட்டிடம் 1911 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வில்லத்திற்கு வியூகுந்து என்று முதலில் பெயரிடப்பட்டது. அக்காலத்தில் புதுதில்லியின் மிகமுக்கியமான ஒரு நில அடையாளமாக இவ்வில்லம் இருந்தது.

புதிய பிரித்தானிய இந்தியாவின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக, இந்திய சுதேச அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரபுக்களுக்காக ஒர் அறை உருவாக்கப்படவேண்டும். இதன் விளைவாக இந்திய பிரபுக்கள் புது தில்லிக்கு வருகை தந்து செயல்பாடுகளில் கலந்து குரல் கொடுப்பது அவசியமாகிப் போனது.[2] 1920 ஆம் ஆண்டில் கொச்சியினை ஆட்சி செய்த கொச்சி மகாராசா, எச்.எச்.ராசா ராமவர்மா, வியூகுந்து வீட்டை சோபாசிங்கிடமிருந்து வாங்கினார். பின்னர் இதை கொச்சின் மாநில அரண்மனை என்று மாற்றம் செய்தார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் கொச்சின் இந்தியாவுடன் சேர்ந்த பிறகு இவ்வில்லம் கேரள அரசாங்கத்தின் சொத்தாக மாறியது. தற்பொழுது கேரளா இல்ல வளாகமாக விரிவடைந்து மத்திய அரசாங்கத்திற்கான கேரள தூதரகமாக இயங்குகிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads