கொட்டியாரக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொட்டியாரக் கோட்டை (Koddiyar fort) என்பது இலங்கையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்றாகும். இதுவே ஒல்லாந்தரால் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கோட்டை ஆகும்.[1][2] இது கொட்டியாரக்குடாவின் தெற்குப் பகுதியில் 1622 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. போர்த்துகேயரை இலங்கையிலிருந்து முற்றாக விரட்டுவதற்காக ஒல்லாந்தருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக கண்டி மன்னன் செனரத் முதூர் எனும் இடத்தில் கோட்டை ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெற்றிருந்தான். எனினும் அவனால் கட்டப்பட்டுக்கொண்டிருந்த இக்கோட்டையானது போர்த்துகேயரால் அரைவாசியிலேயே இடிக்கப்பட்டது. பின்னர் போர்த்துக்கேயர் ஒல்லாந்தரால் தோற்கடிக்கப்பட்டதும் மீண்டும் கொட்டியாரக் கோட்டை 1658 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads