கொத்தடிமை முறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொத்தடிமை முறை (Debt bondage, debt slavery அல்லது bonded labour) என்பது பணத்திற்காக ஒரு குடும்பமோ அல்லது ஊரோ தலைமுறை தலைமுறையாக பணம் படைத்தவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பது ஆகும்.[1] தற்போது, "பன்னாட்டு தொழிலாளர் நலக்கழகம் 2005" இன், கணக்கெடுப்பின் படி 8.1 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உலகெங்கும் வாழ்ந்து வருவது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[2] கொத்தடிமை முறைக்கெதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பு "கொத்தடிமை முறை ஒழிப்பு மாநாடு" நடத்தி இம்முறையின் "தற்காலநிலை" பற்றி தெளிவாக வரையறுத்து கூறுகிறது.[3][4][5]
தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கொத்தடிமை முறையை இன்றளவும் நடைமுறையில் வைத்திருப்பதை ஐ.நா வின் கொத்தடிமை முறை ஒழிப்பு மாநாடுகள் உறுதிப்படுத்துகின்றன..[4][6] உலகத்திலுள்ள கொத்தடிமைகளில் 84 %முதல் 88% தெற்காசியாவில் இருப்பதாக கணிக்கப்படுகிறது.[7]
கொத்தடிமை முறைக்கு எதிராக அதிகளவில் குற்றச்சாட்டுகள் வெளியுலகத்திற்கு வருவதில்லை மேலும் கடுமையான தண்டனைகள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்பவருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இக்குற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திலும், இலங்கை 42 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 18 மில்லியன் பேரும், இலங்கையில் 45 ஆயிரத்து 900 பேரும் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். இந்தத் தகவல்கள் வோல்க் பிரி அறக்கட்டளையின் 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகியுள்ளது.[8]
Remove ads
கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம்
கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக இந்தியாவில் 1976இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொத்தடிமைகளுக்கு உடனடியாக 1,000 ரூபாயும் அடுத்ததாக 19,000 ரூபாயும் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மறுவாழ்வுக்காக வேளாண் நிலமும் அளிக்க வேண்டும். தலித்தாக இருந்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கூடுதலாக 90,000 ரூபாய் வழங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.[9]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads