கொனார்க்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொனார்க் (Konark) (Odia: କୋଣାର୍କ), இந்திய மாநிலமான ஒடிசாவின் புரி மாவட்டத்தில் அமைந்த சிறு ஊர் ஆகும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கொனார்க் சூரியக் கோயில் [1] இவ்வூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது.

விரைவான உண்மைகள் கொனார்க் କୋଣାର୍କकोणार्कKonārka, Konârak, நாடு ...
Remove ads

அமைவிடம்

ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேசுவரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 35 தொலைவிலும், வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த ஊராகும். [2][3]

திருவிழா

இங்குள்ள சூரியக் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கொனார்க் நாட்டியத் திருவிழா நடைபெறுகிறது. [4]

பெயர்க் காரணம்

சமஸ்கிருத மொழியில் உள்ள கொனர்கா (கொனா + அர்கா) எனும் இரண்டு சொல்லில், கொனா என்பதற்கு கோணம் என்றும், அர்கா என்பதற்கு சூரியன் என்றும் பொருளாகும். [5]

கொனார்க் சூரியக் கோயில்

Thumb
கொனார்க் சூரியக் கோயில்

சூரியதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், கி பி 13-ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இக்கோயில் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.[6]

மக்கள் தொகையில்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொனார்க் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 16,779 ஆகும். அதில் ஆண்கள் 8,654 ஆகவும்; பெண்கள் 8,125 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 1750 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.97% ஆக உள்ளது. அதில் ஆண்களின் 79.96% எழுத்தறிவு ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 71.71%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 96.05% ஆகவும்; இசுலாமியர்கள் 0.38% ஆகவும்; சீக்கியர்கள் 0.02% ஆகவும்; பௌத்தர்கள் 0.01% ஆகவும்; சமணர்கள் 0.01%ஆகவும், கிறித்தவர்கள் 3.25% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.28%ஆகவும் உள்ளனர். [7]

Remove ads

சுற்றுலாத் தலம்

இந்தியப் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாக கொனர்க் சூரியக் கோயில் விளங்குகிறது. [8] அந்தி சாயும் வேளையில் கொனார்க் சூரியக் கோயிலில் ஒலி-ஒளி காட்சி காட்டப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads