கொன்றுண்ணிப் பறவை

From Wikipedia, the free encyclopedia

கொன்றுண்ணிப் பறவை
Remove ads

கொன்றுண்ணிப் பறவை அல்லது ஊனுண்ணிப் பறவை (birds of prey அல்லது raptors) என்பது எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு, ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் கொன்றுண்ணிப் பறவை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வரைவிலக்கணம்

பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முழுதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் பூச்சி புழுக்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும்.[1] பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய அலகுகளையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன.[2] பல கொன்றுண்ணிப் பறவைகள், இரையைப் பிடிப்பதற்கும் கொல்வதற்கும் இயலக்கூடிய வகையில், வலுவானதும், வளைந்ததுமான கூரிய நகங்களைக் கொண்டவையாக இருக்கின்றன..[2][3]

Remove ads

வகைப்பாடு

Thumb
கொன்றுண்ணியான ஒரு வகைக் கழுகு

பகல்நேரக் கொன்றுண்ணிப் பறவைகள் பல்கனிபோர்மசு வரிசையின் கீழ் ஐந்து குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவற்றுட் பல பொதுவான கூர்ப்பு வழியைச் சாராமல் இருப்பதால் இவ்வகைப்பாடு சர்ச்சைக்கு உரியதாக உள்ளது.

  • அக்சிபிட்ரிடே
  • பன்டோனிடே
  • சாகிட்டேரிடே
  • பல்கனிடே

இரவுநேரக் கொன்றுண்ணிப் பறவைகள் இசுட்ரிகிபோர்மசு வரிசையின் கீழ் இரண்டு குடும்பங்களாக வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads