கொறிந்திய ஒழுங்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொறிந்திய ஒழுங்கு என்பது, செந்நெறிக் கட்டிடக்கலை எனப்படும் பண்டைக் கிரேக்க, ரோமன் கட்டிடக்கலைகளில் புழக்கத்தில் இருந்த மூன்று முக்கியமான ஒழுங்குகளில் ஒன்று ஆகும். ஏனைய இரண்டும் டோரிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு என்பன. இவற்றுள் அதிக அழகூட்டல்களோடு அமைந்தது கொறிந்திய ஒழுங்கே. இவ்வொழுங்கின் தூண்கள் தவாளிகளோடு கூடிய தண்டுகளையும், அகாந்தசு இலை வடிவம் மற்றும் சுருள் வடிவங்களால் அழகூட்டப்பட்ட போதிகைகளையும் கொண்டன.


கொறிந்திய ஒழுங்கின் பெயர் "கொறிந்த்" என்னும் கிரேக்க நகரத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டது. எனினும் இது முதலில் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்பட்டது ஏதென்சு நகரிலேயே. இவ்வொழுங்கு கிரேகத்திலேயே உருவானது எனினும், கிரேக்கர் தமது கட்டிடக்கலையில் இதை மிகவும் குறைவாகவே பயன்படுத்தினர். ரோமர் காலத்திலேயே இது முழு அளவில் பயன்பட்டது.
Remove ads
ரோமரின் கொறிந்திய ஒழுங்கு
அளவுவிகிதமே கொறிந்திய ஒழுங்கின் இயல்பை வரையறுக்கும் சிறப்பு அம்சம். இதன் அளவுகளும், விகிதங்களும் குறித்த விதிகளுக்கு அமைய ஒருங்கிணைவாக அமைந்திருந்தன. கொறிந்தியத் தூணின் மொத்த உயரத்துக்கும், அத் தூணின் தண்டின் உயரத்துக்கும் இடையிலான விகிதம் 6:5 ஆகும். இதனால், தூணின் உயரம் 6 ரோம அடிகளின் மடங்குகளாகவும், அதன் தண்டு 5 ரோம அடிகளின் மடங்குகளாகவும் அமைந்தன. கொறிந்தியத் தூண்கள் அளவு விகிதத்தைப் பொறுத்தவரை ஒன்றாகவே இருந்ததலும், கொறிந்தியத் தூண்களை மேலும் ஒடுக்கமாக அமைக்க முடியும். கொறிந்தியத் தூண்களின் சிறப்பு அவற்றின் நுணுக்கமான செதுக்குவேலைகளோடு கூடிய போதிகைகளே. இப் போதிகைகளின் நான்கு மூலைகளிலும் அமையும் சுருள் வடிவ அமைப்புகள் வெளியே துருத்திக் கொண்டிருப்பதனால், போதிகைகளின் மேல் அமைக்கப்படும் பலகை என்னும் உறுப்பின் பக்கங்கள் உள்வளைந்து காணப்படுகின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads