கொல்கத்தா நேரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்கத்தா நேரம் (Calcutta time) என்பது 1884 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட இரண்டு நேர மண்டலங்களில் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள வாசிங்டன், டி. சி.யில் நடைபெற்ற அனைத்துலக நிலநெடுவரை மாநாட்டில் இந்நேர வலையம் நிறுவப்பட்டது. 90 ஆவது நெடுவரை கிழக்கை கொல்கத்தாவும் 75 ஆவது நெடுவரை கிழக்கை மும்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நெடுவரை மாநாடு இந்தியாவிற்காக இரண்டு நேர வலயங்களை வரையறுத்தது.
கல்கத்தா நேரம், இந்திய சீர் நேரத்திற்கு இருபத்தி நான்கு நிமிடங்கள் முன்னதாகவும் மற்றும் மும்பை நேரத்திற்கு ஒரு மணி நேரம் மூன்று நிமிடங்கள் முன்னதாகவும் இருக்க வேண்டுமென விவரிக்கப்படுகிறது.[1] (UTC+5:54) (ஒ.ச.நே +5:54). மேலும் சென்னை நேர வலையத்திற்கு 32 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகள் முன்னதாகவும் (ஒ.ச.நே +5:53:20)[2] இருப்பதாக விவரிக்கப்படுகிறது. இந்திய சீர் நேரம் 1906 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இந்திய சீர் நேரத்திற்கு சாதகமாக கொல்கத்தா நேரம் 1948 ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.[3]
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானியப் பேரரசின் இந்தியப் பகுதியில் வானியல் மற்றும் புவியியல் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் கொல்கத்தா நேரம் ஆதிக்கம் செலுத்தியது[4][5]. இலைட்டன் சிட்ராச்சியின் மாமா வில்லியம் சிட்ராச்சி ஒரு முறை கொல்கத்தாவிற்கு வருகை தந்தபோது தன்னுடைய கைக்கடிகாரத்தின் நேரத்தை கொல்கத்தா நேரத்திற்கு தயக்கமேதுமின்றி மாற்றி வைத்துக் கொண்டார். தமது வாழ்க்கையின் எஞ்சிய ஐம்பத்தியாறு ஆண்டுகளையும் அதன்படியே வாழ்ந்தார்.[6][7] கொல்கத்தா நேர வலயத்தில் செய்திகள் ஒலிபரப்புவதாக எலி இராசா என்ற தன்னுடைய நாவலில் யேம்சு கிளவெல் குறிப்பிடுகிறார்.[8]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads