கொழுமிய மிதவை

From Wikipedia, the free encyclopedia

கொழுமிய மிதவை
Remove ads

உயிரணுக்களின் முதலுருமென்சவ்வுகள் (பிளாசுமாச் சவ்வுகள்) கிளைக்கோஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் புரத ஏற்பிகளின் இணைவினால் உருவானவையாகும். இவை கிளைக்கோகொழுமியப்புரத நுண்ணியத் திரளங்களில் கொழுமிய மிதவைகளாக (lipid rafts) ஒருங்கமைவு செய்யப்படுகின்றன[1][2][3]. இத்தகுச் சிறப்பான மென்படல நுண்ணியத் திரளங்கள் மென்தோலின் பாய்மத்தன்மை, மென்படலப் புரதக் கடத்துதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமும், நரம்பியப் பரப்புதல் மற்றும் ஏற்பிக் கடத்துதலை நெறிபடுத்துவதன் மூலமும், சமிக்ஞை மூலக்கூறுகளைக் கூட்டும் ஒருங்கமைவு மையங்களாக திகழ்ந்து, உயிரணு இயக்கங்களைப் பிரித்தமைத்து தனிப்பிரிவுகளாக்குகின்றன[3]. கொழுமிய மிதவைகள் சுற்றியுள்ள கொழுமிய ஈரடுக்குகளைக் காட்டிலும் இறுக்கமாகப் பொதிந்த, மிகவும் ஒழுங்கு முறையாக அமைக்கப்பட்ட, ஆனால் மென்படல ஈரடுக்குகளில் எளிதாக மிதக்கக் கூடியவைகளாகும்[4].

Thumb
கொழுமிய மிதவை அமைப்பு, முதலாம் பகுதி (1) செந்தர கொழுமிய ஈரடுக்கு; இரண்டாம் பகுதி (2) கொழுமிய மிதவை.
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads