கொழும்பு துறைமுக நகரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

துறைமுக நகரம் (Port City) என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச நிதி நகரம் (Colombo International Financial City, CIFC) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறப்புப் பொருளாதார வலயமும், பன்னாட்டு நிதி மையமும் ஆகும். இக்கரையோர நகரம் காலிமுகத் திடலிற்கு அண்மையாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நில மீட்புப் பணிகள் 2018 சனவரி 2018 யில் நிறைவடைந்தன. முழுத் திட்டத்திற்குமான செலவு 15 பில்லியன் அமெரிக்க டொலராக 2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.[1] இத்திட்டம் சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.[2] இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.[3][4]

விரைவான உண்மைகள் கொழும்பு பன்னாட்டு நிதி நகரம் කොළඹ ජාත්‍යන්තර මූල්‍ය නගරයColombo International Finance City, நாடு ...

2021 மே 20 அன்று இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு நிறுவுவதற்கான சட்டமூலத்தை 2021 மே 20 அன்று 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியது.[5]

Remove ads

புவியியல்

இத் துறைமுக நகரம் புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்தின் தெற்கு எல்லைக்கும் கோட்டை வெளிச்சவீட்டுக்கும் இடையில் அமையவிருக்கின்றது. இதற்காக மறுசீரமைக்கப்பட உள்ள கடற்பரப்பு 4500 ஏக்கர்கள் ஆகும்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads