கொழும்பு றோயல் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

கொழும்பு றோயல் கல்லூரி
Remove ads

கொழும்பு றோயல் கல்லூரி அல்லது வேத்தியர் கல்லூரி, (Royal College, கொழும்பு) 1835ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

இக்கல்லூரி, இலங்கையின் ஆளுனராக இருந்த சேர்.றொபேட் வில்மட் ஹோர்ட்டன் அவர்களால் இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை (Eton College) மாதிரியாகக் கொண்டு நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (Colombo Academy) என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மிகப் பழைய பொதுப் பாடசாலையாகும் (அதாவது எம்மதமும் சாராத கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது). கிறிஸ்தவ கல்லூரியின் (Christian College) ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (Rev Marsh) அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் மருதானை புதுக்கடைக்கு அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருக்கும் அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.

Remove ads

இல்லங்கள்

மாணவர்கள் ஹார்ட்லி (Hartley), ஹவார்ட் (Howard), மார்ஷ் (Marsh), போக் (Boake), றீட் (Reid) என ஐந்து இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

றோயல்-தோமியன்

கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (St Thomas College, Mt Lavinia) எதிரான துடுப்பெடுத்தாட்ட ஆண்டுப் போட்டி, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையே நடைபெற்றதோடு இதில் ஆசிரியர், மாணவர் இரு சாராருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்

றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது[1].

றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி

றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியானது இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணியாகும். நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர். றவுஃப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள்.

பலரும் அறிந்த பழைய மாணவர்கள்

Remove ads

கவனிக்கத்தக்க ஆசிரியர்கள்

  • ஆன்ட்ரூ நிக்கொல்
  • குணசேகரா ஈ.சீ.
  • விஜித்த வீரசிங்கா
  • ஏ. கே. சர்மா
  • மா. கணபதிப்பிள்ளை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads