கோட்டு விளக்கப்படம்
விளக்கப்படங்களுள் ஒரு வகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டு விளக்கப்படம் அல்லது கோட்டு வரைபடம் (line chart, line graph) என்பது விளக்கப்படங்களுள் ஒரு வகையாகும். இவ்விளக்கப்படம் தகவல்களை, "அடையாளம் காட்டிகள்" எனப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டுத்துண்டுகளால் இணைத்து காட்சிப்படுத்துகிறது.[1] பலதுறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை விளக்கப்படமாக இது உள்ளது. தரவு புள்ளிகள் வரிசைப்படுத்தப்பட்டும் (புள்ளிகளின் x-அச்சு மதிப்புகளைக் கொண்டு), கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்டும் இருப்பதைத் தவிர கோட்டு விளக்கப்படமானது சிதறல் படத்தை ஒத்திருக்கும். பெரும்பாலும் கோட்டு விளக்கப்படங்கள், கால இடைவெளிகளில் தரவின் போக்கைக் காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கோட்டுப்படங்கள் ஓட்ட விளக்கப்படங்களென அழைக்கப்படுகின்றன.[2]

Remove ads
வரலாறு
கணிதவியலாளர்கள் பிரான்சிஸ் காக்சுபீ, நிக்கோலசு சாமுவேல் குருக்குயிசு, யோகான் என்றிச் இலாம்பெர்ட் மற்றும் வில்லியம் பிளேபேர் ஆகியோர் பயன்படுத்திய கோட்டு விளக்கப்படங்களே காலத்தால் முந்தியவையாகக் கருதப்படுகின்றன.[3]
எடுத்துக்காட்டு
அறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட விவரங்கள் பெரும்பாலும் வரைபடம் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட காலங்களில் ஒரு பொருளின் வேகத்தைத் தரும் விவரங்கள் பின்வருமாறு வரிசைப் பட்டியலிட்டு அதற்கான கோட்டு விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது:

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads