கோண்டா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும். இதன் பரப்பளவு 4448 சதுர கி.மீ ஆகும். சரயு ஆறு இந்தப் பகுதியின் வழியே பாய்கிறது.
Remove ads
வரலாறு

முற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். [1] சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. அண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]
இப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார்,
மொழிகள்
இங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., [3]. இந்தி மொழியிலும் பேசுகின்றனர்.
நபர்கள்
- துளசிதாசர்:
- இராமரின் வாழ்க்கை வரலாற்றை, இராமசரிதமானஸ் என்ற பாடல் தொகுப்பாக வெளியிட்ட துளசிதாசர். இங்கு பிறந்து வளர்ந்தவர். [4]
- பதஞ்சலி:
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads