கோத்திரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோத்திரம் (Gotra வட மொழி சொல்) அல்லது குலம், கூட்டம் மற்றும் பங்காளி (தமிழ் வழி சொல்) வகையறா அல்லது குலவம்சம் என்பது தெற்காசிய கலாச்சாரத்தில், ஒரு சாதிக்குள் உள்ள ஒரு ஆண் மூதாதையர் வம்சத்தில் இருந்து உடைக்கப்படாத ஆண் வழித்தோன்றல் பரம்பரைப் பிரிவாகும்.[1] கோத்திரம் ஒரு சமூகத்தில் ஒரு குழுவை உருவாக்குகிறது. ஒரே குலம் அல்லது கோத்திரத்தைச் சேர்ந்தவர் பங்காளியாகக் கருதப்படுகிறார். ஒரே கோத்ராவிற்குள் நடக்கும் திருமணம், முறையற்ற பாலுறவு என்று கருதப்படுகிறது மற்றும் வழக்கத்தால் தடைசெய்யப்படுகிறது.[2][3]கோத்திரம் என்பதை தமிழில் கூட்டம், குலவம்சம், பங்காளி வகையறா மற்றும் கிளை என்று சொல்வார்கள்.[4][5]

கோத்திரத்தின் பெயரை குடும்பப்பெயராகப் பயன்படுத்தலாம், ஆனால் இது குடும்பப்பெயரில் இருந்து வேறுபட்டது மற்றும் இந்துக்களிடையே, குறிப்பாக சாதிகளிடையே திருமணங்களில் அதன் முக்கியத்துவம் காரணமாக கண்டிப்பாக பராமரிக்கப்படுகிறது.[6][7]

இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவது கோத்திரம். கோத்திரம் குடும்பப் பெயர் போன்றதாகும்.[8] சிலருக்கு வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால்,பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர்.[9][10] இது அறிவியல் ரீதியாகவும் உண்மை மற்றும் இது மரபியல் மற்றும் உயிரியலில் ஆராய்ச்சிக்கான பகுதியாகும்.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும்.[11] அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[12]


புலிவிழியார் கோத்திரம் மற்றும் சடமுடையார் கோத்திரம் தொண்டைமண்டல சைவ வேளாளர் காஞ்சிபுரம் மாட்டத்தில் வசிக்கிறோம்,

தமிழகத்தின் கொங்கு வேளாளர், செங்குந்தர் கைக்கோள முதலியார்[13] மத்தியில் நிலவும் கூட்டம் என்பதும், தமிழகத்தின் சிலபகுதிகளில் நிலவும் பங்காளி வகையறா என்பதும், நாட்டுகோட்டை செட்டியார் மத்தியில் நிலவும் ஒன்பது கோவில்கள் என்பதும் கோத்திரமே ஆகும். ஒரே கோத்திரத்தை(கூட்டம், பங்காளி வகையறா) சார்ந்த மக்கள் சகோதர உறவு முறை உடையவர்கள் என்பதால் அவர்களுக்குள் திருமண உறவு என்பது இருப்பதில்லை.

Remove ads

மேற்கோள்:

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads