கோபல்ல கிராமம்

கி. ராஜநாராயணனின் 1976 ஆம் ஆண்டு புதினம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோபல்ல கிராமம் (Gopalla Grammam) என்பது கி. ராஜநாராயணன் எழுதிய தமிழ் புதினமாகும். இதன் தொடர்ச்சியாக, கோபல்லபுரத்து மக்கள் 1989 இல் வெளியானது.[1]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

கதை

பருந்துப் பார்வை

இந்தியாவின் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தினர், தெற்கே பயணித்து, இறுதியில் தமிழ்நாட்டின் கோவில்பட்டிக்கு அருகே ஒரு இடத்தைக் கண்டறிந்து குறியேறுவது பற்றி இப்புதினம் விவரிக்கிகிறது. இந்த புதினத்தில் ஆந்திரத்தில் மொகலாய மன்னர்களின் காலக்கட்டம், இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பிற இராச்சியங்களின் மாற்றங்கள், இந்தியா மீதான பிரித்தானியர் படையெடுப்பு, பின்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன. கி. ராஜநாராயணன் தென்னிந்தியாவின் வாய்மொழி மரபுகளில் புலம்பெயர்தல் பற்றிய கதைகளின் தொகுப்பாக இதில் குறிப்பிட்டுள்ளார். கதையின் ஊடாக, தென்னிந்தியாவில் நவீன உள்கட்டமைப்பு உருவாவதை புதினம் காட்டுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான அரிதான ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் இந்தப் புதினம் காட்டுகிறது.[2]

Remove ads

பாராட்டுகள்

இதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் 1991 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.[1] எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதினார். மேலும் புதினங்களில் ஒரு புதிய வகையைத் தொடங்கிய முன்னோடி புதினங்களாக அவற்றைக் கருதுகிறார்.[3]

கோபல்ல கிராமம் இரண்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் யு.எஸ்.ஏ மற்றும் எம் விஜயலட்சுமி ஆகிய இருவரும் கோபல்ல கிராமத்தை மொழிபெயர்த்துள்ளனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads