கோபால் (நிரலாக்க மொழி)

இது ஒரு கணிய நிரல் மொழியாகும். From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோபோல் (COBOL) கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் COmmon Business Oriented Language சுருக்கமாக கோபால் அல்லது கோபோல் (இலங்கை வழக்கு) என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வசதிகள் சேர்க்கப்பட்டன.

விரைவான உண்மைகள் நிரலாக்கக் கருத்தோட்டம்:, தோன்றிய ஆண்டு: ...
Remove ads

சரித்திரம்

1959 ஆம் ஆண்டு CODASYL (COnference on DAta Systems Languages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு கோபால் மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதன் சீர்தரம் (நியமம்) விருத்திக்கு அமெரிக்க தேசிய நியமக் குழுவே முன்னெடுத்து வந்துள்ளது.

கோபோல் மொழியைப் பற்றி

  • கோபோல் ஓர் நியம நிரலாக்க மொழியாகும். அதாவது எந்தக் கணினியிலும் எந்தக் கோபால் தொகுப்பியும் (compiler) நிரலாக்க இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட நிரலைக் தொகுக்கும்.
  • கோபோல் ஆங்கிலத்தைப் போன்ற ஓர் மொழியாகும். இதன் நிரலாக்கம் ஆனது சிக்கலான கணினி வார்தைகளில் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதலாம்.
  • கோபோல் நட்புரீதியான மொழியாகும். இது ஏனைய மொழிகள் போன்றல்லாமல் அவ்வளவு சிக்கலானது அல்ல.

கோபால் மொழியின் அனுகூலங்கள்

கோபால் மொழி ஆங்கிலத்தைப் போன்றுள்ளதால் அவை தாமாகவே ஆவணப்படுத்தும் வசதியுள்ளவை ஆகும்.

கோபால் எழுத்துக்கள்

கோபால் மொழியில் சீர்தரமாக A இல் இருந்து Z வரையான பெரிய எழுத்துக்களுடன் (சிறிய எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது) 0 இலிருந்து 9 எண்களுடன் விசேட எழுத்துக்களான ( , ; , . , < , > , $ ,…… உடனான 51 எழுதுக்களை ஆதரிக்கின்றது.

நிரலாக்கும் முறை

மேலதிகத் தகவல்கள் நிரல், வலயப் பெயர் ...

தொடரிலக்கமும் அடையாளம் காணும் இடமும்

மேலதிகத் தகவல்கள் காட்சி (Indicator), கருத்து ...
Remove ads

கோபால் சொற்கள்

எழுத்துக்களிலான தொடர்கள் சொற்களை தோற்றுவிக்கும். கோபால் மொழியில் ஏனைய நிரலாக்கம் போலவே இரண்டு வகையான சொற்கள் உண்டு.

ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சொற்கள்

கோபால் மொழியில் இலக்கணப்படி சீர்தரமாக ஏற்கனவே சில சொற்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை கோபால் மொழியில் தமக்கென ஓர் விசேட கருத்தினைக் கொண்டுள்ளன. ஓர் நிரலாக்கர் இவ்வாறாக வரையறை செய்யப்பட்ட சொற்களை அவ்வரையறக்கு உட்பட்டே பயன்படுத்தல் வேண்டும் மாறாக நிரலாக்கர் விரும்பிய வண்ணம் எதேச்சையாகப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ACCEPT, DIVISION, DIVIDE மற்றும் VALUE போன்றவை.

பயனர் (அதாவது நிரலாக்கர்) நிர்ணயிக்கும் சொற்கள்

இது கோபால் நிரலாக்கர்கள் உருவாக்கும் ஓர் தரவு ஒன்றையோ, பந்தியையோ, கோப்பு, ரெக்காட் (Record) குறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இவையெல்லாம் பயனர்கள் (நிரல்லாக்கர்கள்) உருவாக்கிய சொற்கள் எனப்படும். எடுத்துக்க்காட்டுகள் ஆவன: AMT, REG-NO, AGE.

Remove ads

கோபோல் சீர்தரங்கள்

  • கோபோல் - 68
  • கோபோல் - 74
  • கோபோல் - 85
  • கோபோல் - 2002

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads