கோமகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோமகள் (பிறப்பு: இராஜலட்சுமி, 22 மே 1933 - 21 அக்டோபர் 2004) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவரது நூல்கள் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அன்னை பூமி என்ற நூல் 1982 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான இரண்டாம் பரிசைப் பெற்றது.
துவக்க கால வாழ்கை
இராஜலட்சுமி பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி என்ற சிற்றூரில் 1933 மே 22 அன்று பிறந்தார். கோமகளின் இயற்பெயர் ராஜலட்சுமி. கோமகள் தன் தொடக்கப்பள்ளி நாட்களிலேயே மாணவர்களுக்குக் கதை சொல்வதும், நாடகங்கள் எழுதி நடிக்கச் சொல்லி மகிழ்வதையும் தன் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்.
எழுத்துப் பணிகள்
கோமகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பது புதினங்களையும், முப்பது குறும்புதினங்களும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பிரசண்ட விகடன், கல்கி, மங்கை, மணியன் மாத இதழ், தினமலர், தினமணிக் கதிர், ஜெமினி சினிமா போன்ற இதழ்களில் வெளிவந்தன.[1] இவரது கதைகளும் நாடகங்களும் வானொலி, தொலைக்காட்சி நடகங்களாக ஒலிபரப்பபட்டுள்ளன. இவரது கதைகள் பெரும்பாலும் குடும்பக் கதைகளாகும்.
கோமகள் எழுதிய நூல்களில் மனச்சந்ததி, பனிமலர், சந்தன மலர்கள், நிலாக்கால நட்சத்திரங்கள், சில நீதிகள் மாறுவதில்லை, உயிரின் அமுதாய், மாய வாழ்வு, அன்பின் சிதறல், இந்தியா மீண்டும் விழித்தெழும், முதல் சந்திப்பு, ஒரு மெட்ரோபாலிட்டன் நகரில் காஸ்மோபாலிட்டன் மனிதர்கள், இருவரில் ஒருவர், சுடர் விளக்கு, மேக சித்திரங்கள் ஆகியவை குறிப்பிடதக்கவையாகும்.
Remove ads
விருதுகள்
- வி.ஜி.பி சகோதரர்களின் சந்தனம்மாள் அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளர் விருது, 1987 *தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது.
- படைப்பாற்றலுக்கான எஸ்.வி.ஆர் விருது.
- இவரின் ‘அன்னை பூமி' என்ற புதினம், 1982 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் இரண்டாம் பரிசைப் பெற்றது.
- கல்கி நடத்திய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியிலும், கல்கி - பெர்க்லி (அமெரிக்கா) தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.
வகித்த பொறுப்புகள்
குடும்பக் கட்டுப்பாடு, மதுவிலக்கு, தீண்டாமை குறித்த நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தேர்வு செய்வதற்காகத் தமிழ்நாடு அரசு நியமித்த குழுவில் நடுவராக இருந்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்கை
பொறியாளர் வி. இராமமூர்த்தியை கோமகள் திருமணம் செய்தார். இவர் கணவர் இராமமூர்த்தி கோமகளின் எழுத்துப் பணிகளை ஊக்குவிப்பவராக இருந்தார்.[2] கோமகள் தன் வாழ்வின் பிற்பகுதியில் டிமென்ஷியா என்னும் மறதிநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் நினைவு தப்பிய நிலையில் இருந்து 2004 அக்டோபர் 21 அன்று தன் 71 ஆவது வயதில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads