கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா

இந்திய அரசியல் முன்னணி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha - GJM) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற, ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாகும்.[3] இந்த அரசியல் கட்சி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில், நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள், கூர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேசக் கோரிக்கைக்காக அக்டோபர் 2007 முதல் போராட்டங்கள் நடத்தியது.[4] போராட்டத்தின் விளைவாக 14 மார்ச் 2012 அன்று டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் அடங்கிய கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா गोरखा जनमुक्ति मोर्चा, தலைவர் ...

17 செப்டம்பர் 2015 அன்று இக்கட்சிக்கு மேற்கு வங்க சட்டமன்றத்தில் 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தனர். கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்திற்கு, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு போதிய நிதி ஆதரவு வழங்காத காரணத்தினால், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் 18 செப்டம்பர் 2015 அன்று தங்கள் பதவியை இராஜினமா செய்தனர்..[5]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads