கோர்வா மக்கள்
இந்தியப் பழங்குடிகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோர்வா மக்கள் (Korwa people) இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் அதிகமாக வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இப்பழங்குடிகள் முண்டா மக்கள்|முண்டா மக்களில் ஒரு பிரிவினர் ஆவார். வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக இம்மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் வைத்து இட ஒதுக்கீடு வழங்குகிறது. கோர்வா மக்களில் அகாரியா, தந்த், தில் மற்றும் பகாடி கோர்வா எனும் பிரிவுகள் உண்டு.

மலைக்காடுகளில் வாழும் கோர்வா மக்கள் தற்போது வனத்துறையால் காடுகளை பராமரிக்கின்றனர்.
கோர்வா மக்களில் பெரும்பான்மையாக சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கில் 1,29,429 ஆக வாழ்கின்றனர்.35,606 கோர்வா மக்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கில் வாழ்கின்றனர்.
இந்துக்களாக வாழும் கோர்வா மக்கள் தங்கள் குடியிருப்புகளில் பெண் தேவதையை வைத்து வழிபடுகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads