கோலா சிலாங்கூர் மாவட்டம்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கோலா சிலாங்கூர் மாவட்டம்
Remove ads

கோலா சிலாங்கூர் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor District; சீனம்: 瓜拉雪兰莪县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

விரைவான உண்மைகள் கோலா சிலாங்கூர் மாவட்டம், தொகுதி ...

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[3]

இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.

Remove ads

நிர்வாகப் பகுதிகள்

கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

  1. அப்பி அப்பி (Api-Api)
  2. பெஸ்தாரி ஜெயா (Bestari Jaya)
  3. உஜோங் பெர்மாத்தாங் (Hujong Permatang)
  4. உலு திங்கி (Hulu Tinggi)
  5. ஈஜோக் (Ijok)
  6. ஜெராம் (கோலா சிலாங்கூர்) (Jeram)
  7. கோலா சிலாங்கூர் (Kuala Selangor)
  8. பாசாங்கான் (Pasangan)
  9. தஞ்சோங் காராங் (Tanjung Karang)

மலேசிய நாடாளுமன்றம்

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

Thumb
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[4]

2018 மார்ச் 30-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுயில் சிவராசா ராசையா என்பவர் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 65.33%. சீனர்கள் 21.64%. இந்தியர்கள் 10.72% இதர இனத்தவர் 2.32%.

90,707 வாக்காளர்கள் கொண்ட இந்தத் தொகுதியில் 77,951 வாக்காளர்கள் வாக்கு அளித்தனர். 26,634 வாக்குப் பெரும்பான்மையில் சிவராசா ராசையா வெற்றி பெற்றார்.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...
Remove ads

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாநிலங்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும்.[6][7]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads