கோ-கோ

இந்திய மரபார்ந்த விளையாட்டு From Wikipedia, the free encyclopedia

கோ-கோ
Remove ads

கோ கோ (Kho kho) ஓர் இந்திய விளையாட்டாகும். களத்தில் உள்ள ஒன்பது பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும். எதிரணி ஆட்டக்காரர் தொட்டு விடாமல் தப்பித்து ஓடுவது ஆட்டக்காரரின் நோக்கமாகும்.[1] கோகோவும் கபடியும் இந்தியத் துணைக் கண்டத்தில் விளையாடப்படும் இரண்டு மரபார்ந்த விளையாட்டுகள் ஆகும்.[2] இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தவராலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது.[3] இது சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் அதனிலும் மாறுபட்டது.

விரைவான உண்மைகள் விளையாடுவோர், வயது எல்லை ...
Thumb
ஒரு கோ-கோ ஆடுகளத்தின் (புலம்) திட்ட விளக்கப் படம்.

களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஒரு வரிசையில் அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணியினர் இரண்டு அல்லது மூன்று வீரர்களைக் களத்தில் இறக்குவர். அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரைத் துரத்தி தொட்டு வெளியேற்றுவது ஆகும். ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும். அமர்ந்திருப்பவர்களுக்கிடையே குறுக்கே புக முடியாது. மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும். துரத்தும் பணியைத் தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர். இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணியினர் குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

Remove ads

விதிகள்

  • ஒவ்வொரு அணியும் 12 வீரர்கள் கொண்டிருக்கும். ஆனால், ஒன்பது வீரர்கள் மட்டுமே ஒரு போட்டியில் களம் காண முடியும்.
  • ஒரு போட்டி இரண்டு ஆட்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு ஆட்டமும் ஓடுவது மற்றும் தொடுவது என முறையே ஒன்பது நிமிடங்கள் கொண்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads