கௌரவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தைச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்.

கௌரவர்களின் பிறப்பு

காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை அத்தினாபுரத்துக்கு அழைத்து வந்து திருதராஷ்டிரனுக்கு மணம் முடித்தனர். பார்வையில்லாத ஒருவருக்கு தன்னை மணம் முடித்ததை அறிந்த காந்தாரி தானும் பார்வை அற்று இருக்க கண்களை திரையிட்டுக் கட்டிக் கொண்டாள். மூத்தவராக இருந்தும் பார்வையற்று இருந்ததால் அவருக்கு அரியணை மறுக்கப்பட்டது. சாந்தனு தனது சகோதரன் தேவபியை பின்னுக்கு தள்ளியது போல இது நடந்தது. திருதராஷ்டிரனுக்கு சட்டம் தெரியும் ஆதலால் மறுப்பு தெரிவிக்கவில்லை,விசித்திரவீரியனின் மூத்தமகன் என சில விதிகள் ஏற்றுக் கொண்டாலும் சில விதிகள் மாறாக இருந்ததால் அமைதியானான்.

திருதராஷ்டிரனின் உள் மனம் பாண்டுக்கு முன் தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகிவிட வேண்டும், அப்பொழுதான் தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை தனது மகன் உரிமையோடு அடையமுடியும் என சபதமெடுத்தது. திருதராஷ்டிரனது மனம்போலவே காந்தாரி கர்ப்பமுற்றாள்.கர்ப்பம் இரண்டு வருடங்களுக்கு நீடித்தது. தனக்குப் பிறகு கர்ப்பமுற்ற குந்தி முதல் குழந்தையைப் பெற்றுவிட்டாள் என்பதை அறிந்து பொறுக்க முடியாமல் கருவிலிருந்து குழந்தையை வெளியே தள்ள முடிவெடுத்தாள்.தனதுப் பணிப் பெண்களை அழைத்து ஓர் இரும்பு உலக்கையால் வயிற்றில் ஓங்கி,ஓங்கி அடிக்கச் செய்தாள். முடிவில் அவள் வயிற்றிலிருந்து சதைப்பிண்டம் வெளியே விழுந்தது.குழந்தை அழவில்லையே ஆணா? பெண்ணா? என வினவினாள்.பணிப்பெண்கள் தயங்கினார்கள்,அதட்டினாள் காந்தாரி, பணிப்பெண்கள் உண்மையை கூறினார்கள். காந்தாரி அலறினாள், வியாசரை அழைத்தாள் "நான் நூறு குழந்தைக்கு தாயாவேன் என்று சொன்னீர்களே?" "எங்கே குழந்தைகள்?" காந்தாரியை சமாதானப்படுத்தி சேடிப்பெண்களை அழைத்து சதைப் பண்டங்களை நூறு துண்டங்களாக வெட்டி நூறு நெய் நிறைந்த குடங்களில் போட்டு வைக்கச் சொன்னார் வியாசரை. காந்தாரி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டுமென்றாள். வியாசர் மௌனமாய் சிரித்தார், பின் 101 நெய் குடங்களில் சதைப் பிண்டங்களை போட்டு வைத்தார்கள் பணிப்பெண்கள். 100 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 101 குழந்தைகள் பிறந்து கௌரவர்கள் ஆனார்கள்.[1]

கௌரவர்கள் பெயர் பட்டியல்[1]

இவர்களுள் மூத்தவர் துரியோதனன், இரண்டாமவர் துச்சாதனன். பெண் மகள் துச்சலை.

மேலதிகத் தகவல்கள் வ.எ, பெயர் ...
Remove ads

வெளி இணைப்பு

சான்றாவணம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads