க. இராசாராம் நாயுடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. இராசாராம் நாயுடு (K. Rajaram Naidu) தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.
Remove ads
இளமைப்பருவம்
இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணம நாயுடு திருமாலம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் 1909 பெப்ரவரி 8-இல் பிறந்தார்.
பதவிகள்
1952 ஆண்டு திருமங்கலம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆன இவர் ராஜாஜியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2] இவர் 1957 முதல் 1960 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.[3] தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[4][5] இவர் 28 சனவரி 1985 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads