க. நா. சுப்ரமண்யம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

க. நா. சுப்ரமண்யம்
Remove ads

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam, கந்தாடை சுப்ரமணியம், ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

விரைவான உண்மைகள் க.நா.சு, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.[1][2][3][4][5][6][7]

தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க. நா. சு வின் மருமகன். எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார்[சான்று தேவை]. தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி க.நா.சு. [சான்று தேவை]

Remove ads

படைப்புகள்

(பட்டியல் முழுமையானதல்ல)

கவிதைகள்

  • மயன் கவிதைகள் (1977)
  • க.நா.சு கவிதைகள் (1986)
  • புதுக்கவிதைகள் (1989)

புதினங்கள்

  1. அசுரகணம் (1959)
  2. அவதூதர் (1988)
  3. அவரவர் பாடு (1963)
  4. ஆட்கொல்லி (1957)
  5. இரண்டு பெண்கள் (1965)
  6. ஏழு பேர்[8] (1947)
  7. ஏழுமலை
  8. ஒரு நாள் (1946)
  9. கோதை சிரித்தாள் (1986)
  10. கோபுரவாசல்
  11. சக்தி விலாசம்'
  12. சத்தியக்கிரஹி
  13. சமூகச்சித்திரம் (நளினி) (1953)
  14. சர்மாவின் உயில் (1948)
  15. தந்தையும் மகளும்
  16. தாமஸ் வந்தார் (1988)
  17. நடுத்தெரு
  18. நளினி (1959)
  19. பசி (1943)
  20. பட்டணத்து வாழ்வு (1961)
  21. பித்தப்பூ (1987)
  22. புழுதித்தேர்
  23. பெரியமனிதன் (1959)
  24. பொய்த்தேவு (1966)
  25. மாதவி (வரலாற்றுப் புதினம்) [9]
  26. மால்தேடி
  27. வாழ்ந்தவர் கெட்டால் (1951)
  28. வாழ்வும் தாழ்வும்'

சிறுகதைத் தொகுப்புகள்

  • அழகி முதலிய கதைகள் (1944)
  • ஆடரங்கு (1955)
  • கருகாத மொட்டு (1966)
  • மணிக்கூண்டு (1961)
  • தெய்வ ஜனனம் (1961)
  • விசிறி (2021)

கட்டுரைத்தொகுதி

  • இந்திய இலக்கியம் (1984)
  • இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள்(2002)
  • இந்தியச் சிந்தனை மரபு
  • இலக்கியச் சிந்தனையாளர்கள்
  • இலக்கிய விசாரம் (1959)
  • இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
  • இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
  • உலக இலக்கியம் (1989)
  • உலகத்து சிறந்த நாவல்கள் (1959)
  • உலக இலக்கியம் (1989)
  • ஒட்டடை
  • கலைநுட்பங்கள் (1988)
  • கலையும் வாழ்க்கையும்
  • க.நா.சு பார்வையில் இலக்கிய வளர்ச்சி (1986)
  • கவி ரவீந்திரநாத் தாகூர் (1941)
  • சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
  • ' தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
  • நான்கு நாவல்கள் (1985)
  • நாவல் கலை
  • படித்திருக்கிறீர்களா (1957)
  • புகழ்பெற்ற நாவல்கள் (1988)
  • புதுமையும் பித்தமும் (2006)
  • பாரதியின் காட்சி (1989) (11 இயலில், கடைசி 3 இயல்கள் ஆங்கிலத்தில் உள்ளன)
  • மனிதகுல சிந்தனை வளம் (1966)
  • மனித சிந்தனை வளம் (1988)
  • முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
  • மூன்று நாவல்கள் (1985)
  • விமர்சனக் கலை (1959)

மொழிபெயர்ப்புகள்

  • 1984 (புதினம்)
  • அடிமைப்பெண் (புதினம்)
  • அதிசயம் (புதினம்)
  • அந்த மரம் (புதினம்)
  • அவள்(புதினம்)
  • ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)
  • உடைந்த கண்ணாடி (புதினம்)
  • என் கதை (ஹெலன் கெல்லர்(வரலாறு) (1952)
  • ஐரோப்பிய சிறுகதைகள் (1987)
  • கடல்முத்து (சிறுகதைகள்)
  • கயிறு (புதினம்)
  • காதற்கதை (புதினம்)
  • காளி (புதினம்)
  • கில்காமெஷ் (புதினம்)
  • குருதிப்பூ (புதினம்)
  • குறுகிய வழி (புதினம்)
  • சுவர்க்கத்தில் காரி ஆஸன் (புதினம்)
  • தபால்காரன் (புதினம்)
  • திருட்டு (புதினம்)
  • தேவமலர் (புதினம்)
  • நல்லவர்கள் (சார்லஸ் டிக்கன்ஸ் - புதினம்) (1964)
  • நிலவளம் (புதினம்)
  • பசி (புதினம்)
  • பாரபாஸ் (புதினம்)
  • பொம்மையா? மனைவியா?
  • மதகுரு (புதினம்)
  • மனுஷ்ய நாடகம்(புதினம்)
  • விருந்தாளி (புதினம்)
  • விரோதி (புதினம்)
  • விலங்குப் பண்ணை (புதினம்)
  • ஜாலம் (புதினம்)

நாடகங்கள்

  • ஊதாரி (1961)
  • ஏழு நாடகங்கள் (1944)
  • 'கல்யாணி
  • நல்லவர் (1957)
  • பேரன்பு
  • மஞ்சளும் நீலமும்
  • வாழாவெட்டி

தொகுப்பு

  • எமன் (தொகுக்கப்படாத படைப்பகள்) (தொகுப்பாளர் - விக்ரம் - அழிசி பதிப்பகம்) (டிச.2022)

ஆங்கில நூல்கள்

  • Contemporary Indian Short Stories (1977)
  • Contemporary Tamil Short Stories (1978)
  • Generations (Novel)-Neela Padmanaban (1972)
  • Movements of Literature
  • Sons of the Sun (Novel)-Sa.Kandasamy (2007)
  • The Anklet Story (1977)
  • The Catholic Community in India (1970)
  • Thiruvalluvar and His Thirukkural (1989)

தகைமைகளும் விருதுகளும்

  • சாகித்ய அகாதெமி விருது (1986)
  • தமிழ்நாடு அரசு விருது - கோதை சிரித்தாள் (புதினம்)
  • குமரன் ஆசான் விருது
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads