சக்கரவர்த்தித் திருமகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்கரவர்த்தித் திருமகன் எனும் இராமாயணம் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி எழுதிய இராமாயணம். கல்கி பத்திரிக்கையில் தொடராக வாராவாரம் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தால் பின்னர் ’இராமாயணம்’ என்ற தலைப்பில் வெளியானது. சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் ஆகும்.[1]
இந்நூலின் முடிவுரையில் இராஜாஜி, ’குழந்தைகளுக்கு ஒரு வார்த்தை’ என்ற குறிப்பில், யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தாங்களே படித்து புரிந்து கொள்வதற்காகவே முக்கியமாக எழுதப்பட்ட நூலாகக் குறிப்பிடுகின்றார். [2]
உத்தரகாண்டப் புராணக் குறிப்புகள் பிற்காலச் சேர்க்கையாகக் கருதியுள்ளதால் அவற்றைச் சேர்க்கவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
வாலி வதம் போன்ற சில பகுதிகளில் ஆராய்ச்சி நோக்குடனும் தமது ஒப்புமைக் கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads