சக்குன் மக்கள்
மலேசியாவின் பழங்குடி மக்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்குன் மக்கள் அல்லது ஜக்குன் மக்கள் (ஆங்கிலம்: Jakun people; மலாய்: Orang Jakun) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்; தீபகற்ப மலேசியாவின் உள்நாட்டுப் புறங்கள்; பகாங், பெக்கான், பைராங் ஆற்றின் சுற்றுப்புறங்கள்; ஜொகூர், செரி காடிங் பகுதிகள்; ஜொகூர், சிகாமட் மாவட்டம், மூவார் மாவட்டம், தங்காக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆகும்.[2]



சக்குன் பழங்குடியினர் முன்பு ஒராங் உலு அல்லது உட்புற மக்கள் (Orang Ulu/Orang Hulu) என்று அழைக்கப்பட்டனர். இன்றைய உள்ளூர் மலாய்ப் பேச்சுவழக்கில், சக்குன் எனும் பெயர் அடிமை என்ற இழிவான பொருளைக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சக்குன் மக்களில் பெரும்பாலோர் கடந்த 7000 ஆண்டுகளாக, மலேசியாவின் தென் பகுதி மாநிலங்களான நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், ஜொகூர் மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.[3]
Remove ads
பொது
மலேசிய அரசாங்கம், ஒராங் அசுலி எனும் மலேசியப் பழங்குடியினர் மக்களை 18 வெவ்வேறு துணை குழுக்களாகப் பிரித்து அங்கீகரித்துள்ளது. அந்தப் பிரிவுகளில் இதில் மூன்று பரந்த துணைப் பிரிவுகள் அடங்கும்:[4][5][6]
- நெகிரிட்டோ மக்கள் (செமாங்)
- செனோய் மக்கள்
- மலாய மூதாதையர் (புரோட்டோ-மலாய்)
சக்குன் மக்கள் புரோட்டோ-மலாய் பிரிவில் மிகப்பெரிய துணைக்குழுவாக உள்ளனர். செமாய் மக்களுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய பழங்குடி மக்களாக உள்ளனர். இவர்களைப் போன்று மற்ற நெகிரிட்டோ மக்கள், செனோய் மக்கள் இரண்டு குழுக்களின் முன்னோர்கள் செமாங் மற்றும் செனோய் இனத்தவர்கள் ஆகும்.
Remove ads
வரலாறு
பிற புரோட்டோ-மலாய் மக்களைப் போலவே சக்குன் மக்களின் மூதாதையர்களும், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு சீன மாநிலமான யுனான் மாநிலத்தில் இருந்து மலாய் தீபகற்பத்திற்கு வந்ததாக, பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[7]
மானிடவியல் பண்புகளின் அடிப்படையில், புரோட்டோ-மலாய் மக்கள்; தெற்கு மங்கோலிய இனம மக்கள் என அறியப்படுகிறது. இவர்கள் பொதுவாகவே உயரமான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். மற்றும் மலேசியப் பழங்குடியினர் குழுவில் மற்ற குழுக்களை விட இலகுவான தோலைக் கொண்டுள்ளனர்.
1,500-2,000 ஆண்டுகளுக்கு முன்பு தைவானிலிருந்து முதல் மலாய் மக்கள் தீபகற்பத்திற்கு மிகவும் பின்னர் வந்தனர். ஆரம்பத்தில், மலாய் மக்கள் உள்ளூர் மக்களுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தினர், ஆனால் பின்னர் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
Remove ads
தோற்றம்
மலாய் தீபகற்பத்தின் நெகிரிட்டோ மக்கள் மற்றும் சக்காய் மக்கள் எனும் பிற பழங்குடியினரை விட சக்குன்கள் உயரமானவர்கள்.[8] சக்குன் மக்கள் பொதுவாக ஆலிவ்-பழுப்பு நிறம் முதல் அடர் செம்பு தோல் நிறம் கொண்டவர்கள்.[9]
சிலர் மலாய் இனத்தவர், இந்தியர்கள், சீனர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.[10] மலாய்க்காரர்களுடன் திருமணம் செய்துகொள்பவர்கள் பொதுவாக இசுலாத்தை கடைப்பிடிக்கிறார்கள்; அல்லது மதம் மாறுகிறார்கள்.[11]
இந்தியர்கள், சீனர்களைத் திருமணம் செய்பவர்கள் அவரவர் பண்பாட்டிற்குள் ஈர்க்கப் படுகின்றனர். இறுதியில் தங்கள் கலாசாரம் மற்றும் மரபுகளைக் கைவிடுகிறார்கள். சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பங்கள் சக்குன் பழக்க வழக்கங்களுடன் சீன நாட்டுப்புற மதத்தையும் பின்பற்றுகின்றனர்.[12]
இன்றைய நிலை
இன்றைய காலக்கட்டத்தில், சக்குன் மக்கள் மென்மேலும் நவீனமயமாகி வருகின்றனர். அவர்கள் சாதாரண மலேசியர்களைப் போல் உடை அணிகிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, மகிழுந்து ஓட்டுவது, விசையுந்து ஓட்டுவது, சரளமாக மலாய் மொழி பேசுவது, நவீனமய ஆடைகளை அணிவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால், அவர்கள் பழங்குடியினராகக் காணப்படுவதில்லை.[13]
அதே வேளையில், சக்குன் மக்களின் அன்றாட வசதிகளின் பாதுகாப்பு இன்னும் போதுமானதாக இல்லை.[14] சக்குன் மக்களின் பூர்வீகக் கிராமங்கள் பலவற்றில் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை.[15] அவர்களின் பல சமூகங்களில் வறுமை விழுக்காடு மிக அதிகமாக உள்ளது. இளைஞர்களுக்குப் போதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதும் இல்லை.
நவீன பொருளாதார மாற்றங்களினால் மலேசியாவின் பழங்குடி மக்களின் வாழ்க்கையும் ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.[16][17]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
