சக் தே இந்தியா
2007 இந்தி மொழித் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
Remove ads
சக் தே இந்தியா
சக் தே இந்தியா (chak de India முன்னேறு இந்தியா)என்பது மகளிர் வளைதடிப் பந்தாட்ட விளையாட்டை(ஹாக்கி) மையப்படுத்தி 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய இந்தி மொழித் திரைப்படம் ஆகும். ஆதித்ய சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்க, 2004 ஆம் வெளியான மிராக்கிள் என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய்தீப் சஹ்னி திரைக்கதை எழுதியிருந்தார். சலிம் சுலைமான் இசையில் வெளிவந்த இப்படத்தின் விளையாட்டு தொடர்பான காட்சிகள் ராப் மில்லர் அவர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 2002 காமென்வெல்த் போட்டிகளில் இந்நிய மகளிர் ஹாக்கி அணி பரிசு வென்ற நிகழ்வினால் ஊக்குவிக்கபட்டு உந்தப்பட்டு கற்பனையாக இத்திரைப்படத்தின் கதையினை உருவாக்கினர். படத்தின் கதைகருவானது பெண்ணியம், பாலியல் ரீதியான பாரபட்சங்கள், இந்தியப் பிரிவினை வரலாறு, மதவெறி, இனம் மற்றும் பிராந்திய தப்பெண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது.
கதை
டெல்லியில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் ஹாக்கி இறுதிப்போட்டி காட்சியுடன் படம் சக் தே இந்தியா படம் தொடங்குகிறது. 1/0 என்ற எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கும் பாகிஸ்தானிடம் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் ஷாட்டை தவறவிட்டு வெற்றி வாய்ப்பை இழக்கிறார் இந்திய அணியின் கேப்டன் கபீர்கான் (ஷாருக் கான்) பாகிஸ்தான் அணித்தலைவருடன் விளையாட்டு நட்பு ரீதியில் கைகுலுக்கும் படத்தை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு கபீர்கான் வேண்டுமென்றே வெற்றி வாய்ப்பை தவறவிட்டதாக குற்றம் சாட்டுகின்றன. மத ரீதியான தப்பெண்ணத்தால் செய்யாத தவறுக்கு அவமானப்படுத்தப்பட்டு தன்னுடைய சொந்த வீட்டிலிருந்து தாயுடன் வெளியேறுகிறார் கபீர்கான்.
பின்னர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக வருகிறார். மகளிர் குழுவில் உள்ள 16 விளையாட்டு வீரர்களும் இந்தியாவின் பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கிராமம், நகரம், ஏழை, பணக்காரர் போன்று பல்வேறு அடுக்கு நிலைகளில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் 16 பேரும் தங்களுக்குள்ளாகவே ஒற்றுமையின்றி சண்டையிட்டுக் கொள்கின்றனர். மேலும் இது மகளிர் அணி என்பதால் குடும்பம், உறவுகள், நிர்வாகம், சமூகம் உள்ளிட்ட வெளிநபர்களிடம் இருந்தும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றர்.
எந்நேரமும் சண்டை பிடிக்கும் 16 பேரையும் ஒருங்கிணைத்து, தன்னை மதிக்காத விளையாட்டு வீராங்கனைகளிடம் மரியாதையை சம்பாதித்து அணிக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்தும் ஆண்கள் அணியை மட்டும் அணுப்பலாம். பெண்கள் அணி தேவையல்லை என்கிறது நிர்வாகம். பெண்கள் அணியுடன் ஆண்கள் அணியை மோதிப் பார்க்குமாறு சவால் விடுகிறார் கபீர்கான். போட்டியில் தோற்றாலும் நன்றாக விளையாடிதால் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு மகளிர் அணியையும் அனுப்புகிறார்கள்.
சவாலான அணிகளுடன் கபீர்கானின் வியூகங்களை துணைகொண்டு வெற்றியுடன் நாடு திரும்புகிறது மகளிர் அணி. குடும்பம், உறவு மற்றும் சமூகத்தால் மிக மரியாதையுடனும் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்படுகிறார்கள் இந்தி அணி வீராங்கனைகள். கபீர்கான் இழந்த நற்பெயரை மீட்டெடுத்துக் கொண்டு தனது தாயுடன் தன் ஊரில் உள்ள தன் மூதாதையர்களின் சொந்த வீட்டுக்கு திரும்புகிறார்.
விருதுகள்
சக் தே இந்தியா படமானது, சிறந்த பொழுதுபோக்கு மற்றும் மிகப் பிரபலமான படத்திற்கான தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
வெளியீடு
சக் தே இந்தியா திரைப்படம் உலகளாவிய திரையரங்குகளில் ஆகஸ்ட் 10, 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads