சங்ககால மகளிர் பந்தாட்டம்

From Wikipedia, the free encyclopedia

சங்ககால மகளிர் பந்தாட்டம்
Remove ads

பந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் பெரிதும் விருப்பம் காட்டினர். பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். (Jugglery). அப்பந்தாட்டம் பற்றி சங்கப்பாடல்களில் வரும் செய்திகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

Thumb
பந்தாட்டப் பாங்குகள்

பந்தின் பருமன்

ஆட்டம் தவறியபோது கீழே விழும் பந்து போல விளாம்பழம் விழுந்தது எனக் கூறப்படுவதிலிருந்து பந்தின் பருமனை உணரமுடிகிறது. [1]

பந்து வகை

வரிப்பந்து, வரிபுனை-பந்து, வரியணி-பந்து ஆகியவை பந்தாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. [2]

ஊர், இடம்

திருப்பரங்குன்றம், நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப்பட்டினம், அருவிக்கரை முதலான இடங்களில் பந்து விளையாடியது பற்றிய குறிப்புகள் உள்ளன. [3] [4]

மாடம்,[5] மணல்-முற்றம் [6][7] போன்ற இடங்களில் அவர்கள் பந்தாடினர்.

ஆயத்தாருடன் ஆடினர்
ஆயத்தாருடன் கூடிப் பந்தாடினர் [8] [9]
ஆட்டம் எப்படி இருந்தது
  • பந்நாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல் ஒலி கேட்டது. [10]
  • தினைக்கதிர் அறுத்த தட்டையில் அமர்ந்து எழுந்து குருவி பறப்பது ஆடும் பந்து தவ்வுவது போல் இருந்தது. [11]
  • புன்னைப் பூக்கள் வண்டின் கால்பட்டு உதிர்வது பந்து தாவுவது போல் இருந்ததாம் [12]
  • நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப் பட்டினத்தில் கொன்றைப்பூ பனியில் அசைவது போலவும், மயில் ஆடுவது போலவும் சிலம்பும் மேகலையும் ஒலிக்க உயர்ந்த மாடத்தின்மீது மகளிர் பந்தாடினர். [13]
விருப்பம்
  • தலைவனுடன் ஓடிப்போகும் தலைவி தன் சிலம்பைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்லும்போதும் “வரிபுனை பந்து” கொண்டுசென்றாள்.[14]
  • கிளியும், பந்தும், கழங்கும் வெய்யோள் [15]
  • பிறந்த வீட்டில் அவள் பந்தாடும் காட்சி இல்லையே எனத் தாய் கவலைப்பட்டாள். [16]
  • பந்து, பாவை, கழங்கு ஆகியவற்றையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே (நற்றாய் கலக்கம்)[17][18]
  • வளர்த்த வயலைக் கொடியை கன்று போட்ட பசு தின்றுவிட்டதென்று தான் விளையாடிய பந்தையும், பாவையையும் நிலத்திலே எறிந்துவிட்டு ஒரு சிறுமி வயிற்றில் அடித்துக்கொண்டான். [19]
  • வளங்கெழு திருநகர் பந்து சிறிது எறியினும் (உயங்கின்று என்று அன்னையைத் தழுவுவாள்) [20]
  • கொற்றவைக்குப் பாவை, கிளி, கானக்கோழி, மஞ்ஞை, பந்து, கழங்கு ஆகியவற்றைப் படையலாகத் தந்து பரசினர். [21]
பூப்பந்து
இலையோடு கூடிய பூக்களைச் சுருட்டிக் கட்டிச் செய்த பூப்பந்து எறிதல் ஒருவகைத் திளைப்பு விளையாட்டு. திற-விளையாட்டு அன்று[22]
கோதை-வரிப்பந்து என்பது பூப்பந்து. இதனை எறிந்து விளையாடுவர். [23]
வயலைக்கொடிப்-பந்து
வயலைக் கொடியைப் பந்தாகச் சுற்றி எறிந்து திளைத்து விளையாடுவர். [24]
மைந்தர் குறும்பு
மைந்தர் மகளிரின் பந்தும், கழங்கும் பலகளவு கொண்டு ஓடி அந்தண் கரைநின்று பாய்வார் [25][26]

பந்தாட்டப் பாடல்

பந்தாடும்போது பாட்டும் உண்டு.[27]

Thumb
அம்மானை

சங்ககாலத்து இந்தப் பந்தாட்டம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதை என்னும் நூலில் "பந்தடி கண்டது" என்னும் காதையில் விரிவாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பந்தாட்டம் தனித்திறன் விளையாட்டு. இதுவே மூவர், ஐவர் எனக் கூடி விளையாடும்போது அம்மானை எனப் பெயர் பெறும்.

மேலும் காண்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads