சங்கர் பாலசுப்பிரமணியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் சங்கர் பாலசுப்பிரமணியன் (Shankar Balasubramanian, பிறப்பு: செப்டம்பர் 30, 1966, எப்.ஆர்.எஸ்.) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய வேதியியலர்.[4][5] கேம்பிரிட்சுப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் எர்சல் சிமித் மருத்துவ வேதியியல் பேராசிரியராகவும்,[6][7][7] கேம்பிரிட்சுக் கழகத்தில் புற்றுநோய் ஆய்வில் முதுநிலை குழுத்தலைவராகவும்,[8] கேம்பிரிட்சு டிரினிட்டி கல்லூரியில் உயராய்வாளராகவும்[9] பணியாற்றுகிறார். கருவமிலங்கள்[10] பற்றிய ஆய்வுகளில் அவர் பங்கு பாராட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் சொலெக்சா (Solexa)[11][12] மற்றும் கேம்பிரிட்ச் எப்பிஜெனடிக்சு (Cambridge Epigenetix) நிறுவனங்களின் அறிவியல் நிறுவனராகவும்[13][14] உள்ளார்.
Remove ads
கல்வி
இந்தியாவில் சென்னை நகரில் 1966 இல் பிறந்த சங்கர் பாலசுப்பிரமணியன் ஐக்கிய முடியரசுக்கு 1967இல் அவரது பெற்றோர்களுடன் புலம்பெயர்ந்தார். கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் இயல் அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் (1985-88) பெற்றபின் தொடர்ந்து பேரா. கிறிஸ் ஆபெல் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்.[15]
சர் பட்டம்
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பாலசுப்பிரமணியனின் தொண்டுகளைப் பாராட்டி 2017 புத்தாண்டுப் பட்டம் வழங்கலில் பிரித்தானிய முடியரசு அவருக்கு சர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது.[16]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads