சங்கிராமர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கிராம(संघ्राम) போதிசத்துவர் சீன பௌத்தர்களால் போதிசத்துவராகவும் தர்மபாலகராகவும் வணங்கப்படுபவர். இவரை சீன மொழியில் குவான் யூ(Guan Yu) என அழைப்பர். வரலாற்றின் படி,குவான் யூ கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு போர்த்தளபதி ஆவார்.
பௌத்த புராணங்களின் படி, ஓர் இரவு நேரத்தில் குவான் யூவின் ஆன்மா திரிபிடாக குருவான ஸீயீ முன் தோன்றியது. தியானித்தில் இருந்த ஸீயீ குவான் யீவின் ஆன்மா இருப்பதை அறித்து கொண்டு தியானத்தில் இருந்த கலைந்தெழுந்தார். அவ்வேளையில், குவான் யீ தனக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் படி குருவிடம் கேண்டுக்கோண்டார். இதை ஏற்றுக்கொண்ட குரு அவனது ஆன்மாவுக்கு பௌத்த தர்மத்தை உபதேசித்தார். பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்ட குவான் யூ, பௌத்த தர்மத்தையும் பௌத்த மடாலாயங்களையும் பாதுகாப்பதாக உறுதி பூண்டார். அன்றிலிருந்து குவான் யூ மடாலயங்களின் பாதுகாவலர் ஆனார்.
வடமொழியில் சங்கிராம என்பது மடங்களை குறிக்கக்கூடியச்சொல். எனவே சங்கிராமம் என்பது பௌத்த மடங்களையம், கூடவே பௌத்த தர்மத்தையும் காப்பாற்றும் தேவர்களை குறிக்கிறது. காலப்போக்கில் பௌத்த மடாலயங்களில் சங்கிராம தேவர்களின் பிரதிநிதியாய் குவான் யூ ஆனார். இவருடைய சிலை, கந்தருக்கு அடுத்து கருவறைக்கு இடது புறமாக அமைந்திருக்கும்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads