சங்கீதா கிரிஷ்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கீதா கிரிஷ் (பிறப்பு: 21 அக்டோபர் 1978) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
சங்கீதா சென்னையில் பிறந்தவர்.[1] இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.[2] இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.[1] சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார் [3] இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.
தொழில்
90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.
தொலைக்காட்சியில்
விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார். தற்போது சீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடன திறமைக்கு முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
சொந்த வாழ்க்கை
2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.[4] திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.[5]
திரைப்படத்துறை
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads